2015 நவம்பரின் முற்பகுதியில் உலகளாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அதி நவீன 4G சாதனமான Huawei G7 Plus இனை இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த அறிமுக நிகழ்வு BMICH இல் இடம்பெற்ற சிங்கர் Lifestyle கண்காட்சியில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான Huawei இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான வாங்ஷன்லி, இலங்கைக்கான Huawei சாதனங்களின் உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி இன் விற்பனைகள் துறைப் பணிப்பாளரான குமார் சமரசிங்க மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 

G7 Plus நேர்த்தியானது ஆனால் உறுதியானது, மெதுவான வளைவுகளைக் கொண்டுள்ளதுடன் கையில் வைத்திருப்பதற்கு மிகவும் சிறப்பாக அனைத்து அம்சங்களையும் சமநிலையில் கொண்டுள்ளது. அதிக தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் கொண்டுள்ள அம்சங்களை இந்த சாதனம் மிகவும் நியாயமான விலையில் வழங்குவதுடன், சமூக மற்றும் வியாபார நோக்கங்களுக்காக பெருமளவில் ஸ்மார்ட்போன்களில் தங்கியுள்ள பாவனையாளர்களுக்கு உறுதியான மற்றும் சீரான செயற்பாட்டை வழங்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

Huawei G7 Plus இலங்கையில் Horizon Gold, Moonlight Silver மற்றும் Space Greyஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டுத் தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்துத் தெரிவிக்கையில்,

“மகத்தான தரத்துடன் புத்தாக்கம் மற்றும் அனைத்தையும் தகர்க்கின்ற உற்பத்திகளை அறிமுகம் செய்து, முக்கியமாக இலங்கையில்  ஒவ்வொருவரும் அதனைப் பெற்றுக்கொள்ள இயலும் வகையில் வழங்குவதில் நாம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம். 

நாடெங்கிலும் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்கும் எமது உற்பத்தி வரிசையை மேலும் பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு தரமான உற்பத்தியை மீண்டும் ஒரு முறை அறிமுகம் செய்து வைத்துள்ளமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்”. 

G7 Plus 7.66 மிமீ அளவுடன் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்டது, உலோகத்தினாலான பின்பாகத்தைக் கொண்டுள்ளதுடன், Huawei இன் Emotion UI 3.0 இற்கும் மேலாக Android 4.4 உடன் தொழிற்படுகின்றது. 

5.5 அங்குல 720p தொடுகைத்திரையைக் கொண்டுள்ளதுடன், LED Flash உடன் 13 MP பின்புற கமராவையும் கொண்டுள்ளது. 5 MP முன் எதிர்கொள்ளும் அலகையும் கொண்டுள்ளது. 1.2 GHz quad-core Cortex-A53 CPU உடன் Qualcomm Snapdragon 410 SoC core இனையும், 2GB RAM இன் தணையையும் கொண்டுள்ளது. உள்ளிணைக்கப்பட்ட 16GB தேக்ககத்தைக் கொண்டுள்ளதுடன், microSD இன் துணையுடன் அதனை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். Huawei G7 Plus இரட்டை சிம் அட்டைகளைக் கொண்டிருக்கக்கூடிய சாதனமாக உள்ளதுடன், Wi-Fi, GPS, Bluetooth, FM, 3G, 4Gஇணைப்புத்திறனையும் கொண்டுள்ளது. 

Proximity sensor, Ambient light sensor, Accelerometer உள்ளிட்ட சென்சார் நுட்பங்களையும் இது கொண்டுள்ளது. மாற்றக்கூடிய தொழில்நுட்பத்துடன் இது கொண்டுள்ள ஸ்மார்ட் இரட்டை அன்டெனா 40% வரை இதன் உயர் தர இணைப்புத்திறனை அதிகரிப்பதுடன், இதனை ஒத்த ஏனைய சாதனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த சமிக்ஞை காணப்படும் சூழல்களில் 100% உறுதியான வலையமைப்பு சமிக்ஞையையும் ஏற்படுத்துகின்றது.

அடுத்த தலைமுறை கைவிரல் அடையாளம் மூலமான ஆளடையாள தொழில்நுட்பம் (fingerprint ID technology)முற்றிலும் பாதுகாப்பான இனங்காணலை, மிக வேகமாக பெற்றுக்கொள்வதை யதார்த்தமாக்கியுள்ளது.

ceramic sand blasting தொழில்நுட்பத்தை உபயோகித்து தயாரிக்கப்பட்ட aviation-level அலுமினியத்தால் Huawei G7 Plus இன் 90% உலோக மேற்பாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  G7 Pus இன் நவீன கமரா தொழில்நுட்பம் முன்னரை விடவும் படங்களை அழகாகவும், இலகுவாகவும் வசப்படுத்திக் கொள்ள உதவுகின்றது. 

optical image stabilization மற்றும் பாரிய முகத்துடனான 28 மிமீ பரந்த கோணத்திலான lens உடனான 13 MP BSI கமரா மிகவும் சவாலான சூழ்நிலைகளில் கூட துல்லியமாகப் படங்களை வசப்படுத்த இடமளிக்கின்றது. உயர் வலு கொண்ட flashlight இரவு நேரத்தில் படங்களை எடுக்கும் போது புதிய பரிமாணத்தை வழங்குவதுடன், முன்னாலுள்ள உருவங்களை தெளிவாகக் காண்பித்து, வெளிச்சத்திற்கு அமைவாக அனைத்தையும் பிரகாசமானாகவும், தெளிவாகத் தெரியக்கூடியதாகவும் சரிப்படுத்திக்கொள்ள இடமளிக்கின்றது.  

ஸ்மார்ட்போன்களைச் சந்தைப்படுத்துவதில் இலங்கையில் முதலிடத்திலுள்ள சிங்கர் ஸ்ரீலங்கா, சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள், 400 இற்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தகக் காட்சியறைகள் மற்றும் நாட்டில் 1500 டிஜிட்டல் ஊடக விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் ஊடக வலையமைப்பு அடங்கலாக நாட்டின் மிகப் பாரிய சில்லறை வியாபார வலையமைப்பினூடாக இந்த உற்பத்திகள் கிடைக்கப்பெறுவதை சிங்கர் உறுதிப்படுத்தும்.