(செ.தேன்மொழி)

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் தங்க நகையொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாதிவெலயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா.ஜீ.ஜயசேனவின் வீட்டில் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது 3 பவுண் தங்க வளையலொன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் ஊடாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

மேற்படி விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.