ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கருவெலகஸ்வெவ பிரதேச சபை உறுப்பினரான தமயந்த ஏக்கநாயக்க என்பவரே இவ்வாறு ஆனமடுவ பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபை உறுப்பினரிடமிருந்து 700 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பிரதேச சபையின் உறுப்பினரை ஆனமடு நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.