தென்கொரியாவானது வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து ஜப்பானை நீக்கியுள்ளது.

எனினும் வர்த்தக முன்னுரிமைப் பட்டியலிலிருந்து ஜப்பான் நீக்கப்பட்டதற்கான முழுமையான விவரத்தை தென்கொரியா தெரிவிக்கவில்லை.

ஜப்பானுக்கு எதிராக தென்கொரியா எடுத்துள்ள இந்த மாற்றங்கள் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 

தென்கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பில் கருத்து தெரிவத்த தென்கொரியாவின் வர்த்தக அமைச்சரான சங் யுன்மோ, 'எங்களது வர்த்தக முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 நாடுகளிலிருந்து ஜப்பானை நீக்குகிறோம். ஏற்றுமதிப் பொருட்களில் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை ஜப்பான் மீறியுள்ளது என்று கூறியுள்ளார்.