(எம்.எம். சில்வெஸ்டர்)

அமெரிக்காவில் வசித்துவரும் மரதன் ஓட்ட வீராங்கனையும் தேசிய சாதனை வீராங்கனையுமான ஹிருனி விஜேரட்ண 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்பார் என இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் உப தலைவர் ஜீ.எல்.எஸ்.பெரேரா தெரிவித்தார்.

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது."

இப்போட்டி குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“இம்முறை நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டியில் 486 ஆண்களும், 147 பெண்களுமாக மொத்தமாக 633 பேர் பங்கேற்கின்றனர். இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீர, வீராங்கனைகள் தெற்காசிய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா ஆகிய போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.

அமெரிக்காவில் வசித்துவரும் மரதன் ஓட்ட வீராங்கனையும் தேசிய சாதனை வீராங்கனையுமான ஹிருனி விஜேரட்ண 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். உலக மரதன் ஓட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ள ஹிருனி விஜேரட்ண இன்று இலங்கை வருகிறார். இவர் இறுதியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்றிருந்தார்” என்றார்