இலங்கைக் கிரிக்கெட் அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட தலைமைப் பயிற்­சி­யா­ள­ரான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்க முயற்­சிகள் மேற்­கொண்டு வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் எங்­கி­ருந்து இலங்கை அணிக்கு வந்­தாரோ அதே அணிக்கு மீண்டும் செல்ல தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறார் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க.

பங்­க­ளாதேஷ் அணியின் தலைமைப் பயி­ற்சி­யாளராக செயற்­பட்டு வந்த சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை 2017ஆம் ஆண்டு இறு­தியில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மித்­தது இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம்.

பெரும் எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்ட சந்­திக்க ஹத்­து­ர­சிங்­க­வினால் இலங்கை அணி ஏற்றம் காணும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில், சந்­திக்­கவின் வரு­கைக்குப் பின்னர் இலங்கை அணி மேலும் கீழ்­நோக்­கியே சென்­றது. 

அவரின் சில தனிப்­பட்ட முடி­வு­களால் அணிக்குள் ஒற்­றுமை இல்­லாமல் போன­தா­கவும் தக­வல்கள் கசிந்­தன.

இந்­நி­லையில் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரின் அதி­ரடி உத்­த­ரவின் பேரில் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை கடந்­த­வாரம் இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் தலைமைப் பயிற்­சி­யாளர் பத­வி­யி­லி­ருந்து அதி­ர­டி­யாக இறக்­கி­யது.

அதன்­பி­றகு இடைக்­கால பயிற்­சி­யா­­ளராக ருமேஷ் ரத்­நா­யக்­கவை நிய­மித்­தது இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம்.

இந்­நி­லையில் சந்­திக்க ஹத்­து­ருசிங்­கவை மீண்டும் பங்க­ளாதேஷ் அணியின் பயிற்­சி­யா­ள­ராக்க பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை அதி­கா­ரிகள் முயற்­சித்து வரு­வ­தாக சர்­வ­தேச செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தற்போது பங்களா தேஷ் அணியும் சரியான

பயிற்சியாளர் ஒருவர் இல்லாமல் சற்று திண்டாடித்தான் வருகின்றது.

இறுதியாக நடை பெற்ற இலங்கைக்கு எதி ரான மூன்று போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரை 3–0 என்ற அடிப்படையில் தோற்றது.

இந்நிலையில் சந்திக்க ஹத்துருசிங்கவை  பயிற்சியாளராக நியமித்தால்  மீண்டும் எழுச்சி காணலாம் என்ற எண்ணத்தில் இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.