இந்­திய அணிக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள  டெஸ்ட் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியில் புதி­தாக அதிக எடை கொண்ட வீரர் ஒருவர்  இடம்­பெற்­றுள்ளார். 

மேற்­கிந்­தி­யத்­தீ­வு­க­ளுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இந்­திய அணி மூன்று வகைக் கிரிக்கெட் தொட­ரிலும் விளை­யா­டு­கின்­றது.

இந்­நி­லையில் இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ருக்­கான மேற்­கிந்­தியத் தீவுகள் அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அணியில் புதி­தாக ஒரு வீரர் சேர்க்­கப்­பட்­டுள்ளார். இவ­ரது பெயர் ராஹீம் கார்ன்வோல். இவர் சற்று வித்­தி­யா­ச­மான ஒரு கிரிக்கெட் வீரர். 

ஏனென்றால் இவ­ரது உயரம் 6.6 அடி. இவ­ரது எடை 140 கிலோ. 26 வயது சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான கார்ன்வோல் உள்ளூர் சம்­பியன் போட்டி, மே.இ.தீவுகள் 'ஏ' அணியில் சிறப்­பாக ஆடி­யதால் தேசிய அணியில் இடம் பிடித்­துள்ளார். 

கார்ன்வோல் கூடுதல் பவுன்ஸ், சுழற்­சி­யுடன் சிறப்­பாக பந்­து­வீ­சுவார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

கார்ன்வால் 2014ஆ-ம் ஆண்டில் இருந்து முதல்­தரப் போட்­டி­களில் விளை­யாடி 260 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யுள்ளார், நடு­வ­ரி­சையில் நல்ல துடுப்­பெ­டுத்தாடும் திறமை கொண்­டவர். இது­வரை 2,224 ஓட்­டங்­களை கார்ன்வோல் குவித்­துள்ளார்.

அணி விவரம்: ஜேஸன் ஹோல்டர் (தலைவர்), பிராத்­வெயிட், டேரன் பிராவோ, ஷமார்க் புருக்ஸ், ஜோன் கேம்பல், ராஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வோல், ஷேன் டெளரிச், ஷனான் கேப்ரியேல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ போல், கெமர் ரோச்.