முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்­தினை சீர்தி­ருத்த உட­ன­டி­ ந­ட­வ­டிக்­கை­க­ளை ­எ­டுக்­கு­மாறு சிவில் சமூ­கத்­தினர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். 

இது குறித்து சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் பலரும் கையொப்­ப­மிட்டு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அடுத்­த­டுத்த  அர­சாங்­கங்கள்  முஸ்லிம்  திரு­மண  மற்றும்  விவா­க­ரத்துச்  சட்­டத்­தினைச்  சீர்­தி­ருத்­தத் ­த­வ­றி­ய­மை­யா­ன­து­  மி­க­வும் ­ நீண்­ட­கா­லப்­  பி­ரச்­சி­னை­யாகக் ­கா­ணப்­ப­டு­வ­து­டன்­ முஸ்லிம் சமூ­கத்தின்­ மீ­தும்­ கு­றிப்­பா­க­ பெண்­கள் ­மற்­றும் ­சி­று­வர்­ கள் ­மீ­தும் ­பா­ரி­ய­ தாக்­கத்­தி­னை­ ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இச்­செ­யல் ­மு­றை­யி­னை­ முன்­ னோக்­கி ­எ­டுத்­துச்­செல்­வ­தன்­ மூலம், இலங்­கை­ அ­ர­சி­னால்­ இ­று­தி­யா­க ­இந்­நாட்டு­ முஸ்­லிம்­ பி­ர­ஜை­க­ளுக்­கா­ன­ அ­தி­க­ பா­து

­காப்­பு­ மற்­றும் ­ச­மத்­து­வத்­தி­னை ­உ­று­திப்­ப ­டுத்­த­ மு­டியும்.

தற்­போ­து­ கா­ணப்­ப­டு­கின்ற முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் பல்­வேறு குறை­பா­டுகள், குறிப்­பாக திரு­மணம் முடிக்­கக்­கூ­டிய வயது, திரு­மணம் மற்­றும்­ வி­வா­க­ரத்­தின் ­ப­ரஸ்­ப­ர­ ஒப்­பு­த­லி­லுள்­ள­ பற்­றாக்­கு­றை­ மற்­றும் ­தற்­போ­து­ இ­ருக்­கின்ற­  காதி­ நீ­தி­மன்­ற­ அ­மைப்­பில் ­கா­ணப்­ப­டு­கின்­ற ­தீ­வி­ர­ வ­ரம்­பு­கள் ­போன்­ற­ன­ கா­ணப்­ப­டு­கின்­றன. இப்­பி­ரச்­சி­னை­க­ளை­ அ­ணு­க­ த­வ­று­கின்­ற­மை­யா­ன­து­ பெண்க­ளை­ பா­திக்­கப்­ப­டக்­கூ­டி­ய­  இ­டத்­தில் ­வைப்­ப­து­டன்­ இ­லங்­கை யின்­ அ­ர­சி­ய­ல­மைப்­பி­னால்­ உ­று­தி­செய்­யப்­பட்­ட­ ச­மத்­து­வ­ உ­ரி­மை­யி­னைப்­ப­ல­வீ­னப்­ப­டுத்­து­கின்­றது.

குறைந்­த­து­ முப்­ப­து­ வ­ரு­டங்­க­ளா­கவா ­வது, முஸ்­லிம்­ பெண் ­அ­மைப்­பு­கள் ­மற்­றும் ­கல்­வி­யியலா­ளர்­கள் ­ப­கு­தி­ மற்­றும் ­மு­ழு­மை­யா­ன ­சீர்­தி­ருத்தத்­திற்­கா­க ­வா­திட் ­டுள்­ளனர். அடுத்­த­டுத்­த ­அ­ர­சாங்­கங்­கள்­ 

கு­றைந்­தது 5 குழுக்­க­ளை­யா­வ­து­ நி­ய­மித்தும், அர­சாங்­கம் ­ந­ட­வ­டிக்­கை­ எ­டுப்­ப­தில் ­தோல்­ வி­யுற்­றுள்­ளது.

இறு­தி­யாக 2009 இல் நிய­மிக்­கப்­பட்­ட ­நீ­தி­ப­தி­ ச­லீம் ­மஹ்­ரூப்­ த­லை­மை­யி­லா­ன ­கு­ழு­வா­ன­து­ த­ம­து­ கண்­டு­பி­டிப்­பு­கள் ­மற்­றும்­ ப­ரிந்­து­ரை­களை 2018ஆம்­ ஆண்­டில் ­ச­மர்ப்­பிக்­க­ முன்னர்  9 வரு­டங்­க­ளாக அறி­வு­ரை­  கோ­ரு­த­லில் ­ஈ­டு­பட்­டது. ஜூலை 2019, வர­

வேற்­பு­ மிக்­க ­ந­கர்­வாக, முஸ்­லிம் ­பா­ரா­ளு­ மன்­ற ­உ­றுப்­பி­னர்­கள்­ சீர்­தி­ருத்தத்­திற்­கான 14 பரிந்­து­ரை­க­ளினை ஏற்­றுக்­கொண்­ட­போ­தும்­மீண்­டும் ­சீர்­தி­ருத்­தத்­தி­னைக் ­கு­ழி­ ப­றிப்­ப­தற்­கா­ன­ந­கர்­வு­கள்­தென்­ப­டு­கின்­றன.

மீண்­டும்­ மீண்­டும்­ முஸ்­லிம் ­பெண்­கள்­ மற்­றும்­ கு­ழந்­தை­க­ளைப் ­பா­து­காக்­கத்­த­வ­றி­ய இ­லங்­கை­ நாட்­டின் ­த­வ­றி­னை ­அ­ர­சாங்­கம்­ உ­ட­ன­டி­யா­க­ அ­ணு­க ­ந­ட­வ­டிக்­கை­ எ­டுக்­க­வேண்டும். முஸ்லிம் சமூகத்தினிடையே மார்க்கத்தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் உள்ளடங்கலாக பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்ற போதிலும், நாட்டினது மூலப்பொறுப்பான அதன் அனைத்து பிரஜைகளையும் சமமாக பாதுகாத் தல் மேலோங்க வேண்டும். அரசாங்கம் உறுதியாக நடந்துகொள்வது முக்கியமாக இருப்பதுடன் உடனடியாக பெண்களை ஆண்களிலிருந்து வேற்றுமைப்படுத்துகின்ற சட்டங்களை சீர்திருத்த வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்துவதனால் இந்நாட்டு மக்களுக்கு இவ்வரசாங்கம் மற்றும் பாராளு மன்றத்தினால் அதிக சமத்துவம் மற்றும் நீதியினை உறுதிப்படுத்த வேண்டும்.