(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுற்­றுலா அமைச்­சினால் 48 நாடு­க­ளுக்கு இல­வச விசா வழங்­கு­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­ப­ட்டுள்ள அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் ஒரு முஸ்லிம் நாடு­கூட இல்லை. இது அரபு நாடு­களை வெறுப்­பூட்டும் நட­வ­டிக்­கை­யாகும். 

ஆனால் எமது நாட்­டுக்கு அரபு நாடு­களே அனை த்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் உதவி வந்­தி­ருக்­கின்­றன. அதனால் அர­சாங்கம் இந்த பிழையை திருத்­திக்­கொள்­ள­வேண்டும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

சுற்­றுலா அமைச்­சினால் 48 நாடு­க­ளுக்கு 6மாதங்­க­ளுக்கு இல­வச விசா வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்ள சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் முஸ் லிம் நாடுகள் உள்­வா­ங்­கப்­ப­டாமல் இருப்­பது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொட ர்ந்து தெரி­விக்­கையில்,

ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்னர் இலங்­கைக்கு சுற்­றுலா பய­ணி­களின் வருகை குறை­வ­டைந்­துள்­ளது. அதனால் அவர்­களின் வரு­கையை அதி­க­ரிக்கும் நோக்கில் 48 நாடு­க­ளுக்கு 6 மாதங்­க­ளுக்கு இலங்­கைக்கு வர இல­வச விசா வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியை பெற்­றுக்­கொள்ள சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் அமைச்­ச­ரவை பத்­தி­ர­த்தில் அரபு நாடுகள் ஒன்றின் கூட பெயர் இல்லை.

அத்­துடன் சுற்­று­லாத்­துறை அமை ச்­சினால் பெய­ரி­டப்­பட்டிருக்கும் 48 நாடு­களும் எமது நாட்டை சூறை­யாட திட்­ட­மிட்­ட­வை­க ளும் அம்­பாந்­தோட்டை மற்றும் திரு­கோ­ண­மலை துறை­மு­கங்­களை கைப்­பற்­றிக்­கொள்­வ­தற்­காக உதவி செய்த நாடு­க­ளாகும். ஆனால் அரபு நாடுகள் இந்த நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் கல்­விக்கும் எந்த எதிர்­பார்ப்பும் இல்­லாமல் பாரி­ய­ளவில் உதவி செய்­தி­ருக்­கின்­றன. அந்த நாடுகள் ஒன்­றின்­கூட பெயர் இடம்­பெ­றாமல் இருப்­பது, அரபு நாடு ­களை விரக்­திக்­குள்­ளாக்கும் செய ­லாகும். குறிப்­பாக சவூதி அரே­பியா நாட்டின் பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளுக்­காக 4ஆயி­ரத்து 800 மில்­லியன் டொலர்­களை இல ங்கை அர­சாங்­கத்­துக்கு உத­வி­யாக வழங்கி இருக்­கின்­றது. அதே­போன்று குவைத் அர­சாங்கம் தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­காக 800 மில்­லி­யன்­களை வழங்­கி­யுள்­ளது. டுபாய் அர­சாங்கம் ஆயிரம் டொலர் மில்­லி­ய­னுக்கும் அதிகம் நாட்­டுக்கு உத­வி­செய்­தி­ருக்­கின்­றது. இவ்­வாறு இருக்­கையில் அரபு நாடு­களை புறக்­க­ணித்­தி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடியாது.

அதனால் இதுதொடர்பாக ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் வெளிவிவ கார அமைச்சு ஆகியோருடன் கலந்துரையாடி இருக்கின்றேன். எனவே அரசாங்கம் இந்த பிழையை திருத்திக்கொள்ள நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.