அல்­லா­ஹு­த­ஆ­லாவின்  அரு­ளினால் முஸ்­லிம்கள் தியாகப் பெரு­நாளாம் ஹஜ்ஜுப் பெரு­நாளை  இன்­று ­உ­வ­கை­யுடன் கொண்­டா­டு­கின்­றனர். 'ஈதுல் அழ்ஹா' எனப்­படும் தியாகப் பெருநாள் இறை­வ­னுக்­காக மனிதன் செய்த மிகப்­பெரும் தியா­கத்தை நினை­வு­ப­டுத்திக் கொண்­டா­டு­வ­தாகும். இஸ்­லாத்தின் ஐந்­தா­வது கடைமை 'ஹஜ்' கட­மை­யாகும். தகு­தி­யுள்ள அனைத்து முஸ்­லிம்­களும் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வது அவ­சி­ய­மாகும். வல்ல நாயன் அல்­குர்­ஆனில் பின்­வ­ரு­மாறு கூறு­கின்றான்.

மனித இனத்­துக்கு ஹஜ் (புனித பயணம்) குறித்து பிர­க­ட­னப்­ப­டுத்­து­வீ­ராக. அவர்கள் நடந்தும் தொலை­தூரப் பாதை­க­ளி­லி­ருந்து வரும் ஒவ்­வொரு (நெடும் பய­ணத்தால்) மெலிந்த ஒட்­ட­கங்­க­ளிலும் உம்­மிடம் வரு­வார்கள். அதன் நற்­ப­லனை அவர்­க­ளுக்­காகக் காணவும், அவர்­க­ளுக்கு அவன் அளித்­துள்ள கால்­ந­டைகள் மீது ஒரு குறிப்­பிட்ட நாட்­களில் அல்­லாஹ்வின் பெயரை நினைவு கூரவும் (அவர்கள் வரு­வார்கள்) பின்னர், அவற்­றி­லி­ருந்து உண்­ணுங்கள். மேலும் கஷ்­டத்­தி­லி­ருப்­ப­வர்­க­ளுக்கும் வறி­ய­வ­ர்­க­ளுக்கும் (அதி­லி­ருந்து) உண­வ­ளி­யுங்கள். (ஸுரத்துல் ஹஜ்: 28,29)

 ஹஜ் கடமை ஓர் ஆன்­மிகப் பய­ண­மாகும். இதன் மூலம் பெறப்­படும் ஆன்­மிக அனு­ப­வங்கள், கிடைக்கும் பயிற்­சிகள், மனி­த­னுக்கு இறை நெருக்­கத்தை அதி­க­ரிக்கச் செய்­கி­றது. இறை­யச்சம், உளப்­பக்­குவம், தியாக சிந்­தனை, ஒற்­றுமை, பொறுமை போன்­ற­வை­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக (மக்கா நகரில்) ஒன்று கூடு­வதால் இஸ்­லாத்தின் ஒற்­றுமை உல­குக்கு பறை­சாற்­றப்­ப­டு­கி­றது. உலகில் அதிக எண்­ணிக்­கை­யான மக்கள் ஒன்று கூடும் சமயக் கட­மை­யா­கவும் ‘ஹஜ்’ கடமை உள்­ளது.  உலகின் எட்டுத் திசை­க­ளி­லி­ருந்தும் இனம், நிறம், குலம், மொழி, பிர­தேசம், நாடு, ஏழை, பணக்­காரன் என்ற வேறு­பா­டு­க­ளின்றி பல இலட்­சக்­க­ணக்­கானோர் ஒன்­று­கூடி இஸ்­லா­மிய ஒற்­று­மையை, சமு­தாய ஒற்­று­மையை வெளிக்­காட்டும் வகையில் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றி­விட்டு இந்த தியாகப் பெருநாள் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. 

 ஹஜ் கட­மையில் ஈடு­ப­டுவோர் 'லப்பைக் அல்­லா­ஹும்ம லப்பைக்' என்ற தல்­பி­யாவை  முழங்­கி­ய­வர்­க­ளாக ஹஜ்ஜின் சகல கிரி­யை­க­ளிலும் ஒன்­றா­கவும் ஒற்­று­மை­யா­கவும் ஈடு­ப­டு­வது அருளும் பக்­தியும் நிறைந்த இனிய காட்­சி­யாகும். உலக முஸ்­லிம்­க­ளான நாங்கள் அனை­வரும் ஒரே கொடியின் கீழ் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என ஹஜ் கிரி­யைகள் உணர்த்­து­கின்­றன.

இந்த தியாகத் திருநாள் தந்தை தனது மகனை 'குர்பான்' செய்­வ­தற்­கா­கவும், மகன் தன்­னைத்­தானே தியாகம் செய்­வ­தற்­கா­கவும் முன்­வந்த தியா­கத்தை நினை­வு­ப­டுத்திக் கொண்­டா­டு­வ­தாகும். இப்­ராஹீம் (அலை) அவர்­களும் அவர்­களின் மனைவி ஹாஜரா நாயகி அவர்­களும், அவர்­களின் அருமை மகன் இஸ்­மாயீல் (அலை) அவர்­களும் செய்த மகத்­தான தியா­கத்தை இந்தப் பெருநாள் நினை­வு ப­டுத்­து­கி­றது. இப்­ராஹீம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்­மாயீல் (அலை) அவர்­களை அறுத்துப் பலி­யிட கன­வொன்று கண்­டார்கள். இறை­வனின் கட்­ட­ளைக்கு கீழ் படியும் வகையில் தனது அன்பு மகனை பலி­யிட இப்­ராஹீம் (அலை) அவர்கள் துணிந்­தார்கள். இப்­ராஹீம் (அலை) அவர்கள் தனது அருமை மகனை அறுத்துப் பலி­யிட துணிந்த போது, ஒரு ஆட்டை அறுத்துப் பலி­யி­டு­மாறு அவர்­க­ளுக்கு இறைவன் கட்­ட­ளை­யிட்டான். அவ்­வாறே அவர்கள் செய்­தார்கள்.

இந்த தியா­கத்தின் உச்ச நிலையை முழு உல­கிலும் உள்ள இறை­ய­டி­யார்­க­ளுக்கு உணர்த்­து­வதே குர்­பானின் நோக்­க­மாகும். ஹஜ் பெரு­நாளின் தார்ப்­ப­ரி­யமும் தியா­கத்­தி­லேயே தங்­கி­யுள்­ளது. அத­னால்தான் இந்த பெரு­நாள் தியாகப் பெருநாள் எனப் போற்­றப்­ப­டு­கி­றது. ஆடு­க­ளையும் மாடு­க­ளையும் 'குர்­பானி' கொடுப்­ப­தனால் இந்தப் பெரு­நாளை கொண்­டா­டு­கின்ற கடமை முடிந்­து­வி­டாது. அல்­குர்ஆன் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கி­றது,

'அவற்றின் இறைச்­சியும் அவற்றின் இரத்­தமும் ஒரு போதும் அல்­லாஹ்வை சென்­ற­டை­வ­தில்லை. மாறாக உங்கள் உள்­ளங்­களில் உள்ள இறை­யச்­சம்தான் அவனை சென்­ற­டை­கி­றது. அல்லாஹ் உங்­க­ளுக்கு நேர்­வ­ழியை காட்­டி­ய­தற்­காக நீங்கள் அவ­னது பெரு­மையை எடுத்­து­ரைக்க இவ்­வாறு அவன் அவற்றை உங்­க­ளுக்கு தொண்டு செய்ய வைத்தான். நற்­செயல் செய்­ப­வர்­க­ளுக்கு நீர் நற்­கூலி வழங்­கு­வீ­ராக ( அல் ஹஜ்: 38 ஆவது வசனம்) 

 ஆன்­மீக பய­ணத்தின் பயிற்­சிகள் 

ஹஜ் கடமை ஒரு ஆன்­மீக பய­ண­மாகும். இதன் மூலம் பெறப்­படும் ஆன்­மீக அனு­ப­வங்கள் கிடைக்கும் பயிற்­சிகள் மனி­த­னுக்கு இறை அனு­ப­வத்தை அதி­க­ரிக்கச் செய்­கி­றது. இறை­யச்சம், உளப்­பக்­குவம், தியாக சிந்­தனை, ஒற்­றுமை, பொறுமை, ஒரு­மைப்­பாடு போன்­ற­வை­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.

ஹஜ் கிரி­யை­களில் பெரும்­பா­லா­னவை நாவினால் மொழி­பவை அல்ல. அவைகள் பெரும்­பாலும் செயல்­க­ளாக உள்­ளன. இஹ்ராம் அணிதல், கஃபாவை வலம் வருதல், ஸபா மர்­வா­வுக்­கி­டையில் தொங்­கோட்டம் ஓடுதல், மினாவில் தங்­குதல், அர­பாவில் தரித்தல், சைத்தான் மீது கற்­களை எறிதல், அறுத்­துப்­ப­லி­யிடல், முஸ்­த­்தபாவில் இரவில் தங்­குதல் போன்­ற­வை­களை இதற்கு உதா­ர­ணங்­க­ளாகக் கூறலாம்.

நாங்கள் செய்ய வேண்­டிய தியா­கங்கள் என்ன?

நாங்­களும் எமது வாழ்க்­கை­யிலும் தியா­கங்கள் பல­வற்றை செய்ய வேண்­டி­யுள்­ளது. எமது தியா­கங்கள் இறை­வ­னுக்­காக செய்­யப்­ப­டு­ப­வை­யாக இருக்­கும்­போ­துதான் நாம் இறை­வனின் திருப்­தியைப் பெற்று, அதற்­கான நற்­கூ­லியை பெற­மு­டியும். புக­ழுக்­கா­கவும் பகட்­டுக்­கா­கவும் செய்யும் தான, தர்­மங்கள், உத­விகள் இறை­வனின் முன்னால் செல்­லு­ப­டி­யற்­ற­தா­கி­வி­டு­கின்­றன. இறை­யச்­சத்­துடன் இறை­வ­னுக்­காக செய்­யப்­படும் தர்­மங்கள், அடுத்­த­வ­ருக்கு செய்யும் உத­விகள் இறை­வனால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. வச­தி­ப­டைத்த சிலர் வரு­டந்­தோறும் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­கி­றார்கள். இது­பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி­ய­தாக அபூ­தா­வுதில் பின்­வ­ரு­மாறு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

'ஹஜ் செய்­வது ஒவ்­வொரு ஆண்டும் கட­மை­யா­கின்­றதா? அல்­லது வாழ் நாளில் ஒரு முறை மட்­டுமா? என்று நபி (ஸல்) அவர்­க­ளிடம் அக்ராஹ் இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் கேட்­டார்கள். அதற்கு நபி­ய­வர்கள் ஒரு முறைதான் கடமை­யாகும். எவர் அதி­க­மாக ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­கின்­றாரோ அது அவ­ருக்கு சுன்னத்தாகும் என்று கூறி­னார்கள். ஆகவே, வச­தி­ப­டைத்­த­வர்கள் இவ்­வி­ட­யத்தை கருத்­திற்­கொண்டு தமது பணத்தை, செல்­வத்தை ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு, வசதி குறைந்­த­வர்­க­ளுக்கு , மற்றும் சமு­தா­யத்தில் இவ்­வாறு தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு வாரி வழங்க வேண்டும். எமது உற­வி­னர்கள், நண்­பர்கள், அய­ல­வர்கள் கஷ்­டப்­ப­டும்­போது அவர்­க­ளுக்­காக இறைவன் எமக்­க­ரு­ளி­ய­வற்றை தாரா­ள­மாக வழங்கி உதவ வேண்டும். நாம் அவர்­க­ளுக்கு எம்மால் முடிந்­த­வ­ரையில் உதவி புரிய வேண்டும். இது நாம் செய்யும் பணத் தியா­க­மாகும். இறை­வனின் படைப்­பி­னங்­க­ளுக்கு சேவை செய்­வது இறை வணக்­க­மாகும்.

அதே­போன்று, ஒவ்­வொரு முஸ்­லிமும் இஸ்­லாத்­துக்­காக தனது உடல், பொருள், பதவி, அந்­தஸ்­துக்­களை தியாகம் செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். அவ்­வாறு இருக்­கும்­போதூன் ஆத்­மீக, லௌகீக ரீதி­யி­லான முன்­னேற்­றத்­தையும் அபி­வி­ருத்­தி­யையும் அடைய முடியும். 

தனது தந்தை இப்­ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவுக்காக மகன் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தன்னை இறைவனுக்காக தியாகம் செய்ய முன்வந்ததைப் போன்று , இறைவனின் கட்டளைக்கிணங்கி தனது மகனை பலியிட இப்ராஹீம் (அலை) துணிந்ததைப் போன்று, அன்னை ஹாஜரா நாயகி அவர்கள் அதற்கு இணங்கியதைப் போன்று ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனுக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்ய முன்வர வேண்டும்.

இறைவனின் பாதையில் மிருகங்களை அறுத்துப் பலியிடுவதைப் போன்று இறை வழியில் நடப்பதற்காக எம்மிடமுள்ள தீய பழக்க வழக்கங்களை அறுத்துப் பலியிட வேண்டும். எனவே, தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஹஜ் பெருநாளில் அதுபற்றி சிந்தித்து வாழ்க்கை முழுவதும் அதன்படி நடப்போமாக. 

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!