கோத்தபாயவின் வெள்ளை வான்களிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம்- மங்களசமரவீர

Published By: Rajeeban

11 Aug, 2019 | 08:58 PM
image

கோத்தபாயராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டு நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கியதேசிய கட்சி கோத்தபாயராஜபக்சவை தோற்கடிக்கும் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்தநாட்டிலிருந்து தப்பியோடி இன்னொருநாட்டிற்கு விசுவாசம் வெளியிடாதவராகவும் காணப்படுவார் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீன கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டவராகவும் ஐக்கியதேசிய கட்சியினாலும்  அதன் கூட்டணிகளாலும் ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்டவராகவும் காணப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச எதிர்கட்சியில் பதவி வகித்த கடந்த நான்குவருட காலப்பகுதியில் எந்த பாடத்தையும் கற்கவில்லை,அவர் தனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினார் என்பதை உணரவில்லை,தான் நாட்டை அதிகளவிற்கு பயமுறுத்தினேன் என்பதை உணரவில்லை,தான் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தினேன் என கவலையடையவில்லை,எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

பிரகீத்எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்தும் லசந்தவிக்கிரமதுங்கபடுகொலை செய்யப்பட்டமை குறித்தும்  கீத் நொயார் தாக்கப்பட்டமை குறித்தும் மகிந்த ராஜபக்ச கவலைப்படவில்லை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11