குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம், நீராடிக் கொண்டிருந்த குழு ஒன்றில் இருந்த இருவர் நீரில் மூழ்கியதை அடுத்து அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 

வவுனியா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 16 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.