குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் கடமையில் இருந்த ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் கொள்ளையிடுவதற்காக இரு இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பணத்தை கொள்ளையடிக்க முற்பட்பட்ட நிலையில் எரிபொருள் நிலைய ஊழியர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கொள்ளையர்கள் ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.