கோ - 2 படத்தில் 'என்னை நானே பார்க்கிறேன்' : பாபி சிம்ஹா

Published By: Robert

11 May, 2016 | 03:03 PM
image

வருகின்ற 13 ஆம் திகதி, உலகெங்கும் கோலாகலமாக வெளி வர இருக்கும் 'கோ 2' படத்தின் கதாநாயகன் பாபி சிம்ஹா தனக்கு இந்தப் படம் பெரிய திருப்பம் கொடுக்கும் என்பதில் தீவிர நம்பிக்கையுடன் இருக்கிறார். நிக்கி கல்ராணியுடன் இணையாக, RS Infotainment தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் மிக பெரிய ஹிட் ஆகி இருப்பதுக் குறிப்பிடதக்கது.

இயக்குனர் விஷ்ணுவர்தனின், பில்லா இயக்குனர் சக்ரி டோலேட்டி உடன் பில்லா மற்றும் பில்லா 2 என்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள சரத் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

'இந்தப் படத்தில் நான் ஒருத் துடிப்பு உள்ள, உணர்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள ஒருமாபெரும் சக்தி வாய்ந்த  ஒருவருடன்  என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப் பட்டு உள்ளது. தப்பென்றுப்பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்தக் கதாப்பாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டி இருப்பது எனக்கு பெருமைதான். 'கோ 2' படத்தில் என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் மிக தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. எனக்கும் நடிப்பு பிரகாஷ் ராஜ் சாருக்கும் உள்ளக் காட்சிகள், திரை அரங்கில் தீப்பொறி தெறிக்க வைக்கும் காட்சிகள் ஆகும். இந்த வருடம் முழுவதும் வெளிவர இருக்கும் என்னுடையப் படங்கள் திரை உலகில் என் நிலையை இன்னமும் உயர்த்தும், அதற்;கு முன்னோடியாக 'கோ 2' படத்தின் வெற்றி இருக்கும் என உறுதியாக கூறுகிறார் பாபாபி சிம்ஹா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்