(இராஜதுரை ஹஷான்)

எதிரணியின்  ஜனாதிபதி வேட்பாளர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை தவிர  பிறிதொருவர் கிடையாது. இன்று  எடுக்கப்படும் உத்தியோகப்பூர்வமான தீர்மானங்களில் எக்காரணத்திற்காகவும் மாற்றங்கள் ஏற்படாது என  பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில்   பரந்துப்பட்ட கூட்டணி அமைத்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுதந்திர கட்சியினர் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் எதிரணியினர் ஆதரவு  வழங்க மாட்டோம்.சுயாதீனமாக செயற்படும் நோக்கிலே பொதுஜன பெரமுன  ஸ்தாபிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றினைந்தே    ஜனாதிபதி  வேட்பாளரை தெரிவு செய்வார்கள் என  கடந்த  நாட்களில் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  

 அவர்களன் கருத்து  தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானித்து  நாளை உத்தியோகப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.