எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் வெகுவிரைவில்அறிவிக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நிர்மாணிக்கபட்ட 35 தனி வீட்டுத்திட்டத்தினை கொண்ட ஒ.ஏ.இராமையா புரத்தினை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று காலை பத்திரிக்கை ஒன்றில் செய்தி ஒன்றினை வாசித்தேன். அதில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். முறையாக வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
அவருக்கு நான் ஒன்றை கூறிகொள்ள ஆசைபடுகிறேன். நான் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி காணியினை பெற்று தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் ஊடாக அறிக்கையினை பெற்று அரசாங்கத்தின் அனுமதியோடு இந்த தனி வீட்டுத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்.
நாங்கள் இந்த வீடமைப்பு திட்டத்தினை முறையில்லாமல் அமைக்கவில்லை இவர்கள் அனைவருக்கும் நான் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்வது பொருத்து கொள்ள முடியவில்லை.
இதுவரை காலமும் மலையகத்தில் இருந்த அமைச்சர்கள் தலைவர்கள் மலையகத்தை பற்றி பேசிகொண்டு இருந்தார்களே தவிர இது போன்ற கிராமங்களை அமைத்து கொடுக்கவில்லை நான் அமைச்சராக வந்த பிறகு தான் ஏழு பேர்ச் கானியில் பத்து இலட்சம் ருபா செலவில் இந்த தனி வீட்டு திட்டத்தை மேற்கொண்டு வருகிறேன். இதனை பொருத்து கொள்ள முடியாத சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். யார் என்னை எந்த வகையில் விமர்சித்தாலும் நான் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு தான் இருப்பேன்.
அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு நான் வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டால் சிலர் கூறுகிறார்கள் இந்த வீடமைப்பு திட்டத்தினை அமைச்சர் திகாம்பரம் மேற்கொள்ளவில்லை இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தான் இதனை மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்கள் ஆனால் அமைக்கபடும் வீடமைப்பு திட்டத்தில் ஒரு கூரை தகடு காற்றுக்கு அள்ளுண்டு சென்றால் அது திகாம்பரம் கட்டி கொடுத்த வீடு என விமர்சனம் செய்கிறார்கள்.
மக்களுக்கு தெரியும் திகாம்பரம் வந்த பிறகு மலையகத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று. மாற்றத்தை கொண்டு வர முடியாதவர்கள் தான் இன்று விமர்சனம் செய்து வருகிறார்கள் .
அதேபோல் 50 ரூபா கொடுப்பனவை கட்டாயம் பெற்று தருவோம். ஆனால் 20ரூபாவை பெற்று கொடுத்தவர்கள் கூறுகிறார்கள். நான் மக்களை ஏமாற்றுவதாக நான் ஒரு போதும் மலையக மக்களை ஏமாற்றமாட்டேன். நான் சொல்வதை செய்பவன் 80 வருடம் மலையகத்தை ஆண்டவர்கள். இன்று தான் 30 அம்ச கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். அவர்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில் அரைவாசி பகுதி நிறைவேற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM