(எம்.எப்.எம்.பஸீர்)

  குருனாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் கைதையடுத்து சர்ச்சைக்குள்ளான, அம்மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத் மற்றும் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்கவை அங்கிருந்து இடமாற்றுவதற்கான உத்தரவை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பிறப்பித்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதியுடன்  இதற்கான உத்தரவு பதில் பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி விவகாரத்தில் குறித்த இருவரும் பொலிஸ் ஒழுக்கத்தை மீறி நடந்துகொண்டுள்ளதாக சி.ஐ.டி. பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை கொடுத்துள்ளதன் பின்னணியிலேயே  தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.