இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம்  மத்திய அரசுக்கு மட்டும் உள்ளதாக இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் கொலை குற்றவாளிகளான சாத்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 15 பேரின் தண்டனையை குறைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அதன்படி, இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான எச்.எல்.தத்து, இன்றுடன் ஓய்வுபெறுகிறார். 

இந்நிலையில், அவரது தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு குறித்து அவர் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதுடன் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சார்பில் எல்.எல் தத்து இன்று தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.