தான்சானியா நாட்டில் பெட்ரோல் டேங்கர் லொறி ஒன்று விபத்துக்குள்ளரகியதையடுத்து  வெடித்துச் சிதறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான்சானியா: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்துச் சிதறிய விபத்தில் 57 பேர் பலி

தான்சானியா நாட்டின் தலைநகரான டார் எஸ் சலாம் பகுதியிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோரோகோரோ என்ற இடத்தில் இன்று ஒரு பெட்ரோல் டேங்கர் லொறி ஒன்று  விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்தது.

விபத்தில் சிக்கிய குறித்த லொறியிருந்து வெளியேறிய பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதை கொண்டு செல்வதற்காக பாத்திரங்கள் மற்றும் வாளிகளுடன் அருகாமையில் உள்ள மக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

டேங்கர் வெடித்ததில் சாம்பலான வாகனங்கள்

அப்போது எதிர்பாராத விதமாக குறித்த  டேங்கர் லொறி வெடித்துச் சிதறியதில் 57 பேர் உயிரிழந்தனர்.

அத்தோடு பயங்கரமான தீக்காயங்களுடன் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால்  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.