(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர்.

 

ஊடகங்களுக்கூடாக தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றமையால் மக்களுக்கு பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்தார். 

கோப்குழுவின் செயற்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற குழு அறையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.