அடுத்த ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரது வகிபாகமும்

Published By: Daya

10 Aug, 2019 | 11:50 AM
image

தேசிய அர­சி­யலில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக, சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் திகழ்­கின்­றார்கள். நெருக்­க­டி­யான அர­சியல் சூழல்­களில் இது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. தேர்­தல்­க­ளிலும் பல சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்­கத்தை அல்­லது ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக தமிழ் மக்கள் திகழ்ந்­தி­ருக்­கின்­றார்கள். இந்த தீர்­மா­னிக்கும் சக்­தியில் முஸ்லிம் மக்­க­ளுக்கும் பெரும் பங்­குண்டு என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. 

பேரின அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் கட்­சி­களும் தமது அர­சியல் பலத்­துக்­கா­கவும், அதி­கார பலத்­துக்­கா­கவும் சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களில் தங்­கி­யி­ருக்க வேண்டியிருப்­பதை, ஒரு கசப்­பான அம்­ச­மா­கவே கரு­து­கின்­றார்கள். 

சிறு­பான்மை இன மக்­களின் ஆத­ரவில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய அர­சியல் நிலைமை காணப்­பட்ட போதிலும், அந்த மக்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் மற்றும் இன ரீதி­யான உரி­மைகள் சார்ந்த நன்­மை­களில் பேரின அர­சி­யல்­வா­தி­களும், பேரின அர­சியல் கட்­சி­களும் உரிய அக்­கறை செலுத்­து­வ­தில்லை. 

ஆற்றைக் கடக்கும் வரையில் அண்ணன் தம்பி, ஆற்றைக் கடந்­ததும் நீ யாரோ நான் யாரோ என்ற போக்­கி­லேயே சிறு­பான்மை இன மக்­க­ளு­ட­னான அவர்­களின் அர­சியல் உறவு காணப்­ப­டு­கின்­றது. கறி­வேப்­பி­லையைப் பயன்­ப­டுத்­து­வதைப் போலவே சிறு­பான்மை இன மக்கள் இலங்கை அர­சி­யலில் பேரின அர­சி­யல்­வா­தி­க­ளினால் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்றே கூற வேண்டும். 

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான அர­சி­யலில் சிறு­பான்மை இன மக்­களை, குறிப்­பாக தமிழ் மக்­களைப் புறந்­தள்ளி, பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­க­ளு­டைய வாக்­கு­க­ளி­லேயே அதி­கா­ரத்தைக் கைப்­பற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஓர் இன­வாத அர­சியல் போக்கில் பேரின அர­சி­யல்­வா­திகள் கவனம் செலுத்தத் தொடங்­கி­யி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

நொண்­டிச்­சாட்டு

தேர்­தல்­களில் தமிழ் மக்­க­ளி­னதும், முஸ்லிம் மக்­க­ளி­னதும் வாக்­கு­களைக் கவ­ர்­வ­தற்குக் காட்­டு­கின்ற அக்­க­றையும், ஆர்­வமும் அதி­கா­ரத்­திற்கு வந்த பின்னர், அந்த மக்­க­ளு­டைய நலன்­களில் அவர்கள் காட்­டு­வ­தில்லை. 

விசே­ட­மாக தமிழ், முஸ்லிம் மக்­களின் மொழி மற்றும் மத ரீதி­யான உரி­மை­களை அடக்கி ஒடுக்­கு­வதில் கரி­சனை காட்­டப்­ப­டு­கின்­றதே தவிர, அந்த உரி­மை­களை உரிய வகையில் அவர்கள் அனு­ப­விக்­கத்­தக்க சூழலை உரு­வாக்­கு­வதில் அக்­கறை காட்­டு­வதே கிடை­யாது.

சிங்­கள மொழியே அரச கரும மொழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. தமிழ் மொழிக்கும் அரச கரும மொழி என்ற அந்­தஸ்து அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்ள போதிலும், அது சிங்­கள மொழிக்கு சம­மான முறையில் தனித்­துவம் உடை­ய­தல்ல. 

சிங்­க­ளமே அரச கரும மொழி என்றும் தமிழ் மொழியும் பயன்­ப­டுத்­தலாம் என்ற வகை­யி­லேயே அந்த அர­சி­ய­லமைப்பு உரிமை அமைந்­துள்­ளது. விரும்­பினால் மாத்­தி­ரமே தமிழ் மொழி அரச கரும மொழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம். அவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கட்­டாயம் கிடை­யாது.

இதனை வேறு­வி­த­மாகச் சொன்னால், வச­தி­யான இடத்தில் மாத்­திரம் அல்­லது வச­தி­யான போது மாத்­திரம் தமிழ் மொழிக்கு அந்த அந்­தஸ்தை வழங்­கலாம் என்ற உறு­தி­யற்ற நிலைமை அந்த அர­சி­ய­ல­மைப்பு சட்ட உரித்­து­ரி­மையில் தொனிக்கச் செய்­யப்­பட்­டுள்­ளது. 

இதன் கார­ண­மா­கவே, தமிழ்ப்­பி­ர­தே­சங்­க­ளுக்­குக்­கூட மத்­திய அர­சினால் அனுப்­பப்­ப­டு­கின்ற சுற்­ற­றிக்­கைகள், அதி­கா­ர­பூர்வ கடி­தங்கள் என்­பன சிங்­கள மொழியில் மாத்­தி­ரமே அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றது. அவற்றைத் தமிழ் மொழியில் அனுப்­பு­வ­தற்கு உரிய மொழி­பெ­யர்ப்­பா­ளர்கள் தமது செய­ல­கத்தில் அல்­லது அலு­வ­ல­கங்­களில் இல்லை என்ற நொண்­டிச்­சாட்டு மிகச் சாதா­ர­ண­மாகக் காரணம் கூறப்­ப­டு­கின்­றது. 

அடிப்­படை உரி­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தத் தயா­ரில்லை

இதன் மூலம் அரச கரும மொழி­யா­கிய தமிழ் மொழியின் பயன்­பாடு ஏனோ தானோ என்ற முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. மொழி­பெ­யர்ப்­பா­ளர்கள் அல்­லது தமிழ் மொழி தெரிந்த அலு­வ­லர்கள் இல்லை என்ற காரணம் நியா­யப்­ப­டுத்­தப்­பட்ட நிலைப்­பா­டாக அதி­கா­ர­பூர்­வ­மாகத் தெரி­விக்­கப்­பட்டு அந்த விட­யத்­திற்கு முற்­றுப்­புள்ளி இடப்­ப­டு­கின்­றது.

அரச திணைக்­க­ளங்கள் சார்ந்த செயல் வல்­ல­மைக்­கான கருத்­த­ரங்­குகள், பயிற்சி வகுப்­புக்கள், விழிப்­பு­ணர்வு மற்றும் போதனை வகுப்­புக்­க­ளும்­கூட, பெரும்­பா­லான முறையில் தனித்து சிங்­கள மொழி­யி­லேயே நடத்­தப்­ப­டு­கின்­றன.

 இந்த அமர்­வு­களில் பங்­கேற்­கின்ற தமிழ் உத்­தி­யோகத்­தர்­க­ளுக்கு விளங்கத் தக்க வகையில் தமிழ் மொழி­பெ­யர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கோ அல்­லது அந்த அமர்­வு­களை தமிழ் மொழியில் நடத்­து­வ­தற்கோ தங்­க­ளிடம் தமிழ் மொழி­ய­றி­வுள்ள உத்­தி­யோ­கத்­தர்கள் இல்லை என்ற காரணம் மிகச் சாதா­ரண­மாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தமிழ் மொழி­ய­றி­வுள்ள உத்­தி­யோ­கத்­தர்கள் தங்­க­ளிடம் இல்லை என்ற காரணம் காலம் கால­மாகக் கூறப்­பட்டு வரு­கின்­ற­தே­யொ­ழிய, சிங்­கள மொழி தெரி­யா­த­வர்­களும் நன்­மை அடை­யத்­தக்க வகையில் அல்­லது தமிழ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் அந்தப் பயிற்­சி­களின் மூலம் திற­னு­டை­யவர்­க­ளாக்க வேண்டும் என்ற பரந்த மனப்­பான்­மை­யுடன் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் செயற்­ப­டு­வ­தில்லை. 

சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களின் இத்­த­கைய நிலைப்­பாட்­டுக்கு அப்பால் திணைக்­க­ளங்­களின் கட்­ட­மைப்­புக்குப் பொறுப்­பான அமைச்­சுக்­களும், அமைச்­சர்­களும் அவர்­க­ளுக்­கு­மப்பால் அர­சாங்­கமும் அரச திணைக்­களக் கட்­ட­மைப்பில் தமிழ் மொழிப் பயன்­பாடு ஒரு முக்­கிய அம்­ச­மாக உள்­வாங்­கப்­பட வேண்டும் என்­பதில் கவனம் செலுத்­தி­ய­தில்லை. 

இத்­த­கைய கட்­ட­மைப்பை உரு­வாக்க வேண்டி­யது அரசாங்­கத்­தி­னதும் குறிப்­பாக அரச தலை­வர்கள், அமைச்­சர்­களின் கட­மையும் பொறுப்பும் ஆகும். ஆனால் அரச தலை­வர்­க­ளும் ­சரி அமைச்­சர்­க­ளும் ­சரி சிறு­பான்மை இன மக்­களை உள்­ள­டக்­கி­ய­தாக, தமது பணி­ களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதில் அக் ­கறை கொள்­ளா­தி­ருப்­ப­த­னா­லேயே, இந்தக் கட்­ட­மைப்­புக்கள் இன்னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.  

மொழி அந்­தஸ்து என்­பது வெறு­மனே அர­சி­ய­ல­மைப்பில் சாக்கு போக்­கிற்­கா­கவே  உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது. அதன் கார­ண­மா­கவே அது அரச நிர்­வா­கத்தில் ஏனோ தானோ என்ற வகையில் கையா­ளப்­ப­டு­கின்­றது. அதனை நிர்­வா­கத்தில் பிரிக்க முடி­யா­ததோர் அம்­ச­மா­கவும், தமிழ் மக்­களின் அடிப்­படை உரி­மை­யா­கவும் பேணி நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அரச தரப்பில் ஆர்வம் கொண்­ட­வர்­களும், செயற்­ப­டுத்தும் வல்­லமை கொண்­ட­வர்­களும் இல்லை என்றே கூற வேண்டியுள்­ளது. 

தீவிர பேரி­ன­வாத அர­சியல் போக்கு

இது ஒரு புற­மி­ருக்க, சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் மற்றும் மத உரி­மைகள் பேரின அர­சி­யல்­வா­தி­க­ளினால் பெய­ர­ளவில் மேம்­போக்­கான முறை­யி­லேயே மதிக்­கப்­ப­டு­கின்­றன. சிங்­கள மொழி­யையும் பௌத்த மதத்­தையும் உச்ச நிலையில் வைத்துப் பரா­ம­ரிக்க வேண்டும். பயன்­ப­டுத்த வேண்டும் என்­பதே அவர்­களின் அர­சியல், கலை, கல­சாரப் பண்­பா­டாகத் திகழ்­கின்­றது. பன்­முகத்தன்மை கொண்ட அர­சியல் பண்பு அவர்­க­ளிடம் காணப்­ப­ட­வில்லை. 

பௌத்த மதத்தை ஏனைய மக்­களும் போற்றி பேண வேண்டும். பின்­பற்ற வேண்டும் என்ற மத­வாத சிந்­த­னையில் அவர்கள் மூழ்கிப் போயுள்­ளார்கள். அந்த அடிப்­படைக் கொள்கை கார­ண­மா­கவே இலங்­கையை சிங்­கள பௌத்த நாடு என்று அழைக்­கின்­றார்கள். அதனை முழு­மை­யான சிங்­கள பௌத்த நாடாக மாற்றி அமைப்­ப­தற்­கான நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் அர­சியல், சமூக, கலை, கலா­சாரச் செயற்­பா­டு­களை அவர்கள்  முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். 

பௌத்­தத்­திற்கு முத­லிடம் என்­பதைப் போலவே பௌத்த அர­சி­ய­லிலும் முத­லிடம் மதத் தலை­வர்­க­ளுக்கு முத­லிடம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. மதம் வேறு அர­சியல் வேறு என்ற அர­சியல் நாக­ரிகப் போக்கு பேரி­ன­வாத அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இல்லை. பேரின அர­சியல் கட்­சி­க­ளி­டமும் இல்லை. சிங்­கள பௌத்த நாடு என்றால் இங்கு ஏனைய மதங்­களைப் பின்­பற்­று­கின்ற மக்­க­ளுக்கு இட­மில்லை என்­பதே பொருள். அந்த அடிப்­ப­டை­யி­லேயே அர­சியல் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பௌத்த மதத்தை முதன்­மைப்­ப­டுத்த வேண்டும், மேன்­மை­யுறச் செய்ய வேண்டும் என்­பது மதப்­பற்­று­ணர்வு கொண்ட பண்­பாக மிளி­ர­வில்லை. மாறாக பௌத்த மதம் மட்­டுமே இருக்க வேண்டும். பௌத்­தர்கள் மட்­டுமே வாழ வேண்டும் என்ற அதி­தீ­விரப் போக்கு அவர்­களின் அர­சி­யலில் ஊறிப் போயுள்­ளது. மறை­முக நிகழ்ச்­சி­ நி­ரலின் அடிப்­ப­டையில் நீண்ட காலத்­துக்­கான திட்­ட­மிட்ட செயற்­பா­டாக அது, ஓர் அர­சியல் வெறி­யாக ஆட்­சி­யா­ள ர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி என்ற இரு­பெரும் அர­சியல் கட்­சி­களே நாட்டின் அர­சி­யலில் ஆட்­சி­யு­ரி­மையைக் கைப்­பற்ற வல்ல அர­சியல் சக்­தி­க­ளாகத் திகழ்­கின்­றன. 

யுத்­தத்தின் பின்­ன­ரான நாட்டின் அர­சியல் செல்­நெ­றியில் பொது­ஜன பெர­முன என்ற புதிய அர­சியல் சக்­தி­யொன்று மேலெ­ழுந்­துள்­ளது. இது பழம் பெரும் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி என்­ப­னவற்றை மேவி சிங்­கள மக்கள் மத்­தியில் செல்­வாக்கு பெறப் போகின்ற ஓர் அர­சியல் சமிக்ஞை காணப்­ப­டு­கின்­றது என்­பது வேறு விடயம். 

ஆனாலும் ஆட்­சி­ய­தி­கா­ரத்தை மாறி மாறி கைப்­பற்ற வல்ல ஐக்­கிய தேசிய கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் அதி­காரப் போட்­டிக்­காகத் தமக்குள் மோதிக்­கொள்­கின்ற போதிலும், சிங்­கள பௌத்த நாடு, பௌத்த மதத்திற்கு மட்­டுமே முன்­னு­ரிமை என்ற சிங்­கள பௌத்த அர­சியல் நிலைப்­பாட்டில் அந்தக் கட்­சி­க­ளிடம் வேறு­பாடு கிடை­யாது. 

உள்­நோக்கம் வேறு வெளிக்­காட்­டு­வது வேறு இத­னால்தான், சிறு­பான்மை தேசிய இன­மா­கிய தமிழ் மக்­களின் தாயகக் கோட்­பாட்டு ரீதியில் ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு இரண்டு கட்­சி­க­ளுமே அடிப்­ப­டையில் எதி­ரான கொள்­கை­களைக் கொண்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றன. 

ஆட்­சியில் இருக்­கும்­போது ஐக்­கிய தேசிய கட்சி இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண முற்­பட்டால் அதனை எதிர்க்­கட்­சி­யாக உள்ள ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி முழு­மூச்­சாக எதிர்த்து, அந்த முயற்­சியை குழப்­பி­ய­டிப்­பது வழக்கம். அதே­போன்று ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி ஆட்­சியைக் கைப்­பற்­றி­யுள்ள வேளையில் எதிர்க்­கட்­சி­யாக உள்ள ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்ற அர­சியல் தீர்வு முயற்­சிக்கு எதி­ராகச் செயற்­பட்டு அதனை முறி­ய­டித்­து­வி­டு­வதும் வழக்­க­மான அர­சியல் நடை­மு­றை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது. 

தேசிய அள­வி­லான இரண்டு பெரிய அர­சியல் கட்­சி­க­ளுமே, அடிப்­ப­டையில் சிங்­கள பௌத்த நாடு என்ற சிங்­கள பௌத்த தேசிய அர­சியல் கொள்­கையில் மூழ்கி இருப்­பதன் கார­ண­மா­கவே, சிங்­கள மக்­க­ளு­டைய ஆத­ரவின் ஊடாக தேர்­தல்­களில் வெற்றி பெறு­கின்ற அர­சியல் சாணக்­கிய உத்­தியில் பற்­று­றுதி கொண்­டி­ருக்­கின்­றன. 

சிறு­பான்மை இன மக்­களை இந்த நாட்டின் பங்­கு­தா­ரர்­க­ளாக சம உரி­மை­யு­டைய சக குடி­மக்­க­ளாகக் கரு­தினால், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும், அர­சியல் ரீதி­யாக அவர்­க­ளு­டைய ஆத­ரவைப் பெற்றுச் செயற்­ப­டு­வ­திலும் பேரின அர­சி­யல்­வா­திகள், அக்­கறை கொண்­டி­ருப்­பார்கள். ஆனால், அத்­த­கைய பல்­லின அர­சியல் கொள்­கையும் பல்­லின பல­ம­தங்­களைக் கொண்ட நாடு என்ற வகை­யி­லான அர­சியல் போக்கும் அவர்­க­ளிடம் காணப்­ப­ட­வில்லை. 

இத­னா­லேயே சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் மற்றும் மத உரி­மைகள் மோச­மான முறையில் மீறப்­ப­டு­கின்ற நிலைமை நாளுக்­குநாள் தீவி­ர­ம­டைந்து செல்­கின்­றது. பல்­லின மக்­க­ளையும் பல மதங்­களைச் சேர்ந்த மக்­க­ளையும் கொண்ட பன்­மைத்­துவக் கொள்­கை­யு­டைய ஜன­நா­யக நாடாக இலங்­கையை அவர்கள் வெளிக்­காட்டிக் கொண்ட போதிலும், சிங்­கள பௌத்தம், சிங்­கள பௌத்த தேசியம் என்­பதே அவர்­களின் உண்­மை­யான அர­சியல் நிலைப்­பா­டாகும். 

வாக்­கு­று­திகள் கைவி­டப்­ப­டு­வதே வழமை

இதன் அடிப்­ப­டை­யி­லேயே சிங்­கள மக்­க­ளு­டைய பேரா­த­ரவின் ஊடாக அதி­காரங்க­ளையும், ஆட்சி உரி­மை­யையும் கைப்­பற்ற வேண்டும் என்ற தேர்­தல்­கால அணு­கு­மு­றையில் பேரின அர­சி­யல்­வா­திகள் நாட்டம் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த வகை­யி­லேயே பெய­ர­ளவில் சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வையும், அவர்­களின் வாழ்­வியல் முன்­னேற்­றத்­திற்­கு­மான அபி­வி­ருத்தி சார்ந்த வாக்­கு­று­தி­க­ளையும் தேர்தல் கால வாக்­கு­று­தி­க­ளாக அவர்கள் முன்­வைக்­கின்­றார்கள். 

ஆனால் தேர்தல் காலத்தில் சிறு­பான்மை இன மக்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­து­கின்ற தீர்­வு­க­ளுக்­கான நிலைப்­பாடும், அபி­வி­ருத்­திக்­கான வாக்­கு­று­தி­களும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய பின்னர் கருத்திற் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளப்­ப­டு­வ­து­மில்லை. அவர்கள் தங்­க­ளு­டைய மறை­முக நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் சிங்­கள பௌத்த தேசி­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளி­லேயே தீவிர கவனம் செலுத்­து­வார்கள். இதுவே அர­சியல் யதார்த்­த­மாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இந்த இரட்டை வேட அர­சியல் போக்கு நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையின் கீழ் அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக வெளிப்­ப­டுத்திய உறு­தி­மொ­ழி­களும், ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய பின்னர் அளித்த உறு­தி­மொ­ழி­களும் காற்றில் பறந்­த­னவே தவிர அவற்றில் எது­வுமே உரிய முறையில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

வலி­காமம் வடக்கிலிருந்து இடம்­பெ­யர்ந்த மக்கள் அவர்­க­ளு­டைய சொந்த இடங்­களில் குறிப்­பிட்ட காலத்­திற்­குள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்று அவர் அளித்த உறு­தி­மொழி இன்­னுமே நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் மாற்று நட­வ­டிக்­கைகள் சில மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள போதிலும் யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும், மூன்று தசாப்­தங்­க­ளாக இடம்­பெ­யர்ந்­துள்ள அந்த மக்கள் அனை­வரும் அவர்­க­ளு­டைய சொந்த இடங்­க­ளுக்குத் திரும்பிச் செல்ல முடி­யா­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர்.

அர­சியல் கைதி­களின்  விடு­தலை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்த வாக்­கு­று­தி­களும் அவ்­வாறே காற்றில் பறக்­க­வி­டப்­பட்ட சங்­க­தி­யா­கவே  உள்­ளது. இது விட­யத்தில் கண்­து­டைப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு, சட்ட நுணுக்­கங்கள் பற்­றிய சாட்­டுக்கள் கூறப்­பட்­ட­னவே தவிர அர­சியல் கைதி­களின் விடு­தலை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­மட்டில் ஏறக்­கு­றைய மறக்­கப்­பட்ட விட­ய­மா­கவே உள்­ளது.

இது­போ­லவே வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய விட­யத்தில் அவர்­க­ளு­டைய உற­வி­னர்­க­ளினால், ஆதா­ர­பூர்­வ­மாக விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­றிதி­களும் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளன. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­மாறு கோரி கிட்­டத்­தட்ட 1000 நாட்­க­ளாக அவர்­களு­டைய உற­வி­னர்கள் வீதியில் இறங்கிப் போராடி வரு­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய கோரிக்­கைக்கு எவ­ருமே உரிய முறையில் செவி­சாய்த்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்­கள பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் மீது நம்­பிக்கை இழந்­துள்­ளார்கள்.

சாது­ரி­ய­மான செயற்­பாடும் அதற்­கான சிந்­த­னையும் அவ­சியம்

சிறு­பான்மை இன­மக்கள் பேரின அர­சி­யல்­வா­திகள் மீதும், பேரின அர­சியல் கட்­சிகள் மீதும் அர­சியல் ரீதி­யாக நம்­பிக்கை இழந்­துள்­ளார்கள் என்­பது ஒன்றும் இர­க­சி­ய­மான விட­ய­மல்ல. இதனை பேரின அர­சி­யல்­வா­தி­களும், பேரின அர­சியல் தலை­வர்­களும் நன்கு உணர்ந்­துள்­ளார்கள். 

இருப்­பினும் சிறு­பான்மை இன­மக்­களும் இந்த நாட்டின் குடி­மக்­களே என்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளையும் அர­வ­ணைத்துக் கொண்டு அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற அர­சியல் நல்­லு­ணர்வு பேரின அர­சி­யல்­வா­தி­க­ளி­டத்தில் மனப்­பூர்­வ­மாக ஏற்­ப­ட­வில்லை. 

நாட்டின் மொத்த சனத்­தொ­கையில் 75 வீத­மான சிங்­கள மக்­களின் ஆத­ரவு இருந்­தாலே போதும், அத்­துடன், பெய­ர­ளவில் சிறு­பான்மை இன மக்­களின் ஒரு தொகை வாக்­கு­களைப் பெற்று ஜனா­தி­பதி பத­வியைக் கைப்­பற்­றி­வி­டலாம் என்ற சிந்­தனை அவர்­க­ளிடம் இருந்து வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. 

விசே­ட­மாக ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிடப் போவ­தாகத் தகவல் வெளி­யிட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக் ஷ இந்த விடயத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாய்ப்பைப் பெறுவதற்காகப் பல்வேறு தரப்பினரையும் சந்திப்பதுடன், தமது நிலைப்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் வெளியிடத் தொடங்கியிருக்கும் அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனுடனான சந்திப்பின்போது சிங்கள மக்களின் பேராதரவில் தேர்தலில் வெற்றி பெற உத்தேசித்துள்ளமை குறித்து தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களாக யார் யார் எந்தெந்தக் கட்சிகளிலிருந்து போட்டியிடப் போகின்றார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மிகப் பலம் வாய்ந்த வேட்பாளராக கோத்தபாய ராஜபக் ஷ கருதப்படுகின்றார். அவரே பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளார் என்ற தகவலும் பரவலாக வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் சிங்கள மக்களுடைய ஆதரவை மட்டுமே பெரிய அளவில் நோக்க மாகக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஏனைய வேட்பாளர்களும் போட்டியிடுவார்களானால் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களம் மிகச் சூடுபிடித்த களமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, தேர்தல் வெற்றிக்காக சிங்கள மக்களைக் குறிவைக்கின்ற தேர்தல் உத்தியானது, சிறுபான்மை இனமக்களின் வாக்குகளாளே வெற்றியாளரைத் தீரமானிக்கின்ற பலமுள்ள சக்தியாகப் பரிணமிக்கின்ற சந்தர்ப்பம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, இத்தகைய நுணுக்கமான தேர்தலுக்கு முந்திய கள நிலைமைகளின் போக்கு தந்திரோபாயச் செயற்பாடுகள் என்பனவற்றைத் தீர்க்கமாக உய்த்து உணர்ந்து அதற்கேற்ற வகையில் மிகச் சாதுரியமாக இந்தத் தேர்தலைத் தமிழ் மக்கள் கையாள வேண்டும். இது விடயத்தில் தங்களுக்குள் முட்டிமோதி ஆளை ஆள் சீண்டிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தீவிரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியதும் அவசியம். 

- பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49