JASTECA 2016 விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சம்பத் வங்கி

Published By: Raam

11 May, 2016 | 12:56 PM
image

அண்­மையில் கொழும் பில் இடம்­பெற்ற JASTECA 2015 விருது வைப­வத்தில் சமூகப் பொறுப்­பு­ணர்வு மற்றும் பேண்­தகு நிலை­பா­டு­க­ளுக்­கான வெண்­கல விருது சம்பத் வங்­கிக்கு வழங்­கப்­பட்­டது.

தேச மக்­களின் வாழ்­வா­தார அபி­வி­ருத்தி தரங்­களை மேலு­யர்த்தும் பிர­யத்­த­னங்­க­ளுக்­கென முன்­னெ­டுக்­கப்­பட்டும் ’சம்பத் சவிய’ திட்­டத்­தினை முன்­னி­றுத்தி மேற்­படி விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.தொழில் முயற்­சி­யாண்மை விருத்தி என்னும் எண்­ணக்­க­ருவை நடை­மு­றைப்­ப­டுத்தும் வகை­யி­லான பயிற்­சிப் ­பட்­ட­றைகள் மூல­மாக சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சிகள் வங்­கி­யினால் முதன்மைப் படுத்­தப்­பட்­டுள்­ளன.

சம்பத் சவிய திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து பெரும் எண்­ணிக்­கை­யி­லான சிறிய நடுத்­தர வர்த்­தக நிறு­வ­னங்கள் பெரு வெற்­றி­பெற்ற நிலையை அடைந்­துள்­ளன.

மிகப்­பெரும் வங்­கி­களில் ஒன்­றான சம்பத் வங்கி ஒவ்­வொரு ஈடு­பாட்­டா­ளர்­க­ளுக்கும் உண்­மை­ யான பெறு­ம­தி­களை முழு­ ம­ன­துடன் வழங்கி வரு­கின்­றது என்று வங்­கியின் சாத­னைகள் பற்றி எடுத்­து­ரைத்த பிரதி பொது முகா­மை­யாளர் தாரக ரண்­வல தெரி­விக்­கிறார். "இந்த மதிப்பு மிக்க விரு­தினை பெற்­றுக் ­கொண்­டதன் மூலம் நாம் பெரு­ம­ளவு மதிப்பு நிலையை அடைந்­துள்ளோம். எமது செயற்­பா­டுகள் சமூ­கத்தின் தேவை­க­ளையும் நாட்டின் சிறந்த நிலை­யையும் எடுத்­தி­யம்­பு­கின்­றன.மேற்­படி விரு­துகள் வைப

வம் ஜப்பான், ஸ்ரீலங்கா தொழில்­நுட்ப கலா­சார சங்­கத்­தினால் ஒருங்­க­மைக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இவ்­வ­மைப்­பா­னது நிறு­வ­னங்கள் பல்­வே­று­வகை முன்­னெ­டுப்­புகள் பல­வற்றின் வழியே மக்­க­ளு­ட­னான உற­வுகள், செயற்­பா­டு­களை மிளிரச் செய்­து­வ­ரு­கின்­றது. JASTECA நிறு­வ­ன­மா­னது வர்த்தக நிறுவனங்கள் ஈடுபாட்டாளர்களினதும் சட்டக்கடப்பாடுகளினதும் எல்லைகளை தாண்டிச் சென்று வாடிக்கையாளரின் அபிலாசைகளை நிறைவேற்றும் கடப்பாடுகளை முன்னிறுத்தி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right