சீரற்ற இதயத் துடிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Daya

10 Aug, 2019 | 11:01 AM
image

எம்மில் பலரும் இதயத் துடிப்பினை உணர்வார்கள். சிலர் அதை காது கொடுத்து கேட்பர். நீரிழிவு நோய், குருதி அழுத்த நோய், கொலஸ்ட்ரோல் போன்ற தொற்றா நோய்கள் தொடக்க நிலை அல்லது வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கு லேசாக தலை சுற்றல் அல்லது படபடப்பு, பதற்றம் போன்றவை ஏற்படும் பொழுது அவர்களது இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கு செல்கிறது. இதனை கூர்ந்து கவனித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதனை தவிர்த்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே ஒரு காரணமாகக்கூடும்.

எம்முடைய இதயப்பகுதியில்  மின் அதிர்வு மையம் ஒன்று உண்டு. இதன் மூலமாக தான் இதயத் துடிப்பு சீராக இயங்குகிறது. இதயத் துடிப்பிற்கு ஏற்ற அளவிற்கு தான் இதயத்திற்கு இரத்தம் செல்லும். அதனால் இதயத்துடிப்பு முக்கியமான செயற்பாடாக இருக்கிறது. இந்த இதயத் துடிப்பு சீராக இருக்கும் வரை. உங்களது இதயத்திற்கு இரத்தம் எந்தவித தடையுமின்றி சீராக செல்லும். ஆரோக்கியமாக இருப்பீர்கள். 

இதயத்துடிப்பிற்கான மின் அதிர்வுகள் இயல்பான நிலையில் இல்லாமல் சமச்சீரற்றதாக இருக்கும் பொழுது, இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்படும். இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்தவோட்டத்திலும் அதன் பாதிப்பு தெரியும். இதனை ஒரு எளிதான ஈசிஜி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு மருந்துகள், மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி விடலாம்.

சிலருக்கு இதயத் துடிப்பினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக அவர்களின் மார்பு பகுதியில் ஹோல்டர் மானிட்டர் எனப்படும் சிறிய கருவியைப்  பொருத்துவார்கள். பாதிப்பின் துல்லியத்தை அறியவும், பாதிப்பின் வீரியத்தை அறியவும் இத்தகைய கருவியை ஒரு வார காலம் வரை நோயாளிகள் தன்னுடன் வைத்திருக்க வேண்டும். பிறகு  வைத்தியர்கள் அதில் பதிவு செய்யப்பட்ட இதயத்துடிப்பு சார்ந்த பதிவினை ஆராய்ந்து, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து, அதற்குரிய சிகிச்சையை வழங்கி அதிலிருந்து முழுமையாக குணப்படுத்துவார்கள்.

சிலருக்கு முதுமையின் காரணமாக இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தால், அவர்களுக்கு பேஸ்மேக்கர் என்ற ஒரு கருவியை பொருத்தி இதயத் துடிப்பினை சீராக்குவார்கள். இதயத் துடிப்பிற்கு உரிய மின்சக்தி உடலிலிருந்து குறைவாக கிடைப்ப தாலும் அல்லது மின் சக்திக்குரிய அமைப்பு வலிமை குறைந்து இருப்பதாலும் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இரத்த குழாய்களிலும், இதயத் துடிப்பிற்குரிய மின்னோட்ட பாதையில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படக்கூடும். அதனால் எப்போதும் இதயத் துடிப்பை சீரானதாகவே வைத்திருக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04