(எம்.எப்.எம்.பஸீர்)

சட்டவிரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை அளித்த மூன்று தாய்மாருக்கு போதனா வைத்தியசாலையில் இரகசியமான முறையில் எச்.எஸ்.ஜீ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீர பண்டாரவின் உத்தரவிற்கமைய இவ்வாறு வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த சிலரிடம் எச். எஸ்.ஜீ சோதனை நடத்தியதாக குறித்த வைத்தியசாலையின் எக்ஸ்-ரே (கதிர்வீச்சு) தொடர்பிலான வைத்திய நிபுணர்கள் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலம் ஊடாக இவ்வாறு வெளிப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா குருணாகலை பிரதான நீதிவான் சம்பத் ஹேவா வசத்திற்கு அறிவித்தார்.

வைத்தியர் ஷாபி விவகார வழக்கு விசாரணைகள் இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதன்போதே இந்த விடயம் அம்பலத்திற்கு வந்தது.