ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்பதற்காக இந்திய கடற்படையினர் போர்க் கப்பல்களை கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் எச்சரிக்கையுடன் நிறுத்தி வைத்துள்ளனர்.

அத்துடன் ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளனர்.

அப் பகுதியின் நிலைமை அமைதியாக இருந்தபோதிலும், எந்தவொரு அசம்பாவித நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இவ்வாறு பாதுகாப்பு படையினர் கடைமையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதேவேளை காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நேற்று முதல் லாகூர்- டெல்லி சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்திய பாகிஸ்தான் இன்றைய தினம் ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளது.