மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸாரால் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி  ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிமடு பகுதியில் இன்றைய தினம் அனுமதிப் பத்திரம் இருந்தும்  சட்டதிட்டங்களை மீறி முறையற்ற விதத்தில்  உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றிக்கொண்டிருந்தவேளையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.