குருணாகல் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீத்சிறி ஜயலத்தை புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு மாற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீத்சிறி ஜயலத்தை கடந்த 2 ஆம் திகதி திருகோணலை பொலிஸ் பிரிவுக்கு மாற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்திருந்தது.

இந் நிலையில் அதனை இரத்து செய்தே தேசிய பொலிஸ் ஆணைக்குழு அவரை புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளது.

இதேவேளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தனை குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.