(செ.தேன்மொழி)

குருநாகல் நகரபை தலைவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் மேல் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது பிரதான பிரதிவாதியான குருணாகல் நகரசபை தலைவர்  மன்றில் முன்னிலை ஆகாததினால் நீதிவான் சந்தேக நபருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் பிராதான சந்தேக நபரான நகரசபை தலைவர் தனது சட்டதரணியுடன் இன்று மன்றில் ஆஜராகியுள்ளார். இதன்போதே நீதிவான் இவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி பணக் கொள்ளையில் ஈடுப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேக நபரான நகரசபை தலைவர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.