பதுளை, மடுல்சின்ன கல்வுல்ல மெட்டிகாத்தன்னை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கணவனும் மனைவியும் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இழக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.