அமெரிக்கா போன்று இந்தியாவும் சீனாவும் சலுகை கேட்டால் இலங்கை என்ன செய்வது ? - பந்துல கேள்வி

Published By: Daya

09 Aug, 2019 | 04:22 PM
image

( ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாதுகாப்பு உடன்படிக்கை மூலம் அமெரிக்காவுக்கு கொடுக்கும் அதே சலுகையை இந்தியாவும் சீனாவும் கேட்டால்  என்ன செய்வது? அமெரிக்காவிற்கு இந்த சலுகை கொடுத்தால் சீனா போன்ற நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார். 

இலங்கை  அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அமெரிக்காவை எதிர்க்கும் எதிர்க்கட்சி அல்ல நாம். யுத்தத்தை நிறுத்த அமெரிக்கா  எமக்கு பல உதவிகளை செய்துள்ளது. அதற்கான உடன்படிக்கைகளை செய்துள்ளோம். அதேபோல் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளையும் நாம் செய்துள்ளோம். அதில் தவறில்லை. ஆனால் இரகசியமாக செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் குறித்தே எமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றோம். 

வெளிப்படையாக நாம் கலந்துரையாடி இரு நாட்டுக்கும் ஏற்ற வகையில் உடன்படிக்கையை செய்துகொண்டால் அதற்கு எமது எதிர்ப்பில்லை. எந்த உடன்படிக்கை என்றாலும் அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து ஆராய்ந்து ஜனநாயக ரீதியில் செய்துகொள்ளவேண்டும் என்றே கூறுகின்றோம். மேற்குலக நாடுகளின் யுத்த பூமியாக எமது நாட்டினை மாற்றுவதென்றால் அதற்கு இடம்கொடுப்பதா என்பதே எமது கேள்வி என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொணடுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:05:55
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49