(எம்.மனோசித்ரா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் உத்தேச ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை கூடிய விரைவில் ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. 

அதனடிப்படையில் உத்தேச கூட்டணிக்கான யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்யடி திருத்தங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் யாப்பை முழுமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.