ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடமாகாண ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (09)முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள் இந்த கண்காணிப்புக்கு வருவதற்கு அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டே இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிபுணர்கள் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில்  ரிக்கார்டோ செல்லெரி, ஹான்ஸ் வெபர், டிமித்ரா, பவல் ஜுர்சாக் மற்றும் லான் மில்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.