மாணவர்களின் ஆங்கில மொழி விருத்திக்காக அமெரிக்க தன்னார்வ ஆசிரிய சேவை

Published By: Vishnu

09 Aug, 2019 | 02:34 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் வசதி குறைந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ டெப்லிஸ்ட்  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

அமெரிக்காவின் தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களின் சேவை 1960 ஆம் ஆண்டு முதல் 90 வரை வழங்கப்பட்டு டெலிக் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல்  அமெரிக்கா தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை மீண்டும் வழங்க விருப்பம் கொண்டுள்ளது. இதன்படி முதலாம் கட்டமாக 30 ஆசிரியர்களுடன் ஆரம்பித்து 150 வரையான ஆசிரியர்களை கொண்ட குழுவின் ஊடாக வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழி கற்பித்தல் சேவையை அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்கள் குழாம் வழங்கவுள்ளது. அத்துடன் ஒரு ஆசிரியரின் தன்னார்வ சேவைக்காலம் 2 வருடங்களாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:38:19
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02