சீன நிறுவனமான ஹூவோவே (Huawei) தனது சொந்த செயலியை கொண்டு வடிவமைக்கப்பட்ட முதலாவது ஸ்மார்ட் தொலைபேசியை இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் வெளியிடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் Huawei யின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து Huawei யின் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு கூகுள் மேப்ஸ், யூடியூப், ஆண்ட்ரோய்ட் ஒப்பரேடிங்  அனுமதியும் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் Huawei தனக்கு சொந்தமான செயலிகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே "ஹாங்மெங்" என்ற செயலியைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதலாவது ஸ்மார்ட் தொலைபேசிகளை இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.