நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள இலங்கை 15 பேர் கொண்ட அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையிலேயே இப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்றைய தினம் 15 பேர் கொண்ட அணிக் குழாமை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அனுமதியுடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்தக் குழாமில் அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, தினேஷ் சண்டிமல், குசல் மெண்டீஸ், குசல் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டிசில்வா, அகில தனஞ்சய, லசித் எம்புலுதெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, ஒசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.