வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது.

தரணிக்குளம் மக்களின் நீண்ட கால தேவையாக அறநெறி பாடசாலை காணப்பட்டு வந்தது. இதனை கருத்திற்கொண்டு வீடமைப்பு மற்றும் கலாச்சார  அமைச்சின் 4மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று காலை அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது.

தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.ராகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா,  பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உயர் அதிகாரிகள், கலாச்சார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் அறநெறி ஆசிரியர், ஊர்மக்களென பலரும் கலந்து கொண்டனர்.