கென்ய பாராளுமன்றத்திற்கு குழந்தையை அழைத்து வந்த பெண் எம்.பி.வெளியேற்றம்

Published By: Vishnu

09 Aug, 2019 | 10:31 AM
image

கென்ய பாரா­ளு­மன்­றத்­திற்கு தனது குழந்­தையை தூக்கி வந்த  பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை அங்­கி­ருந்து வெளியேற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

சுலேகா ஹஸன் மேற்­படி பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை  வெளியேற பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து   அங்­கி­ருந்த ஏனைய பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும்  பாரா­ளு­மன்­றக் கட்டிடத்தை விட்டு வெளியே­றி­யுள்­ளனர். 

சுலேகா பாரா­ளு­மன்­றத்தை விட்டு  வெ ளியேறி குழந்­தையை எவ­ரி­ட­மா­வது ஒப்­ப­டைத்து விட்டு  திரும்ப பாரா­ளு­மன்றிற்குள் வரலாம் என சபா­நா­ய­க­ரான கிறிஸ்­தோப்பர் ஒமு­லேலே உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டு­த்து பாரா­ளு­மன்­றத்தில் பெரும் சல­ச­லப்பு எழுந்­தது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு­வ­ருடன் ஒருவர் கடும் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டனர்.

அந்­நாட்டு பாரா­ளு­மன்ற சட்­ட­வி­தி­களின் பிர­காரம் குழந்­தைகள் உட்­பட அறி­மு­க­மற்­ற­வர்­க­ளுக்கு  பாரா­ளு­மன்­றத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு அனு­ம­தி­யில்லை. இந்­நி­லை­யில். சுலே­காவின் செயற்­பாடு  வெட்­கக்­கே­டான ஒன்­றென   சில ஆண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தில் மேலும் குடும்ப நட்­பு­றவு சூழ்­நிலை ஏற்ப­டுத்­தப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­திய  சுலேகா,  அத்­த­கைய நிலைமை ஏற்­பட மேலும் பல பெண்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு வர­வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

"எனக்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு குழந்­தை­யுடன் வரு­வது  உண்­மை­யி­லேயே கடி­ன­மான ஒரு விடயம்.  ஆனால் எனக்கு ஏற்­பட்ட அவ­சர நிலை­மை­யொன்றால் என்ன செய்­வது என்று எனக்குத் தெரி­ய­வில்லை" எனத் தெரி­வித்த  அவர்,  பாரா­ளு­மன்­றத்தில் குழந்­தைகள் காப்­ப­க­மொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அதில் தனது குழந்­தையை விட்டு விட்டு வரக் கூடி­ய­தாக இருந்­தி­ருக்கும்" என்று கூறினார். இது தொடர்பில் பிரதி சபா­நா­யகர் மோஸஸ் சிபோய் தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்­றத்தில் குழந்­தை­களைப் பரா­ம­ரிப்­ப­தற்­கான வச­தி­யொன்று உள்­ள­தா­கவும் ஆனால் அங்கு  குழந்­தை­களை பரா­ம­ரிப்­ப­தற்கு  விரும்பும் பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உத­வி­யாளர் ஒரு­வரை அழைத்து வர­வேண்­டி­யுள்­ள­தா­கவும் கூறினார். உலக தாய்ப்­பா­லூட்டும் வாரத்தில் இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து  சுலே­காவின் ஆத­ர­வா­ளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2011  ஆம் ஆண்டில் நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டோர்ன் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்ற  ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் தனது  3 மாதக் குழந்தையுடன் கலந்துகொண்டு  வரலாறு  படைத்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52