சவூதி அரே­பிய மன்னர் சல்மான்  இந்த வாரம் இடம்­பெ­ற­வுள்ள ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்க நியூ­ஸி­லாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பிராந்­திய பள்ளிவா­சல்­களில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் சிக்கி உயிர்­தப்­பி­ய­வர்கள் மற்றும் உய­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்­களை உள்­ள­டக்­கிய 200 பேருக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

அந்த 200 பேருக்­கு­மான  விமானக் கட்­ட­ணங்கள் மற்றும் தங்­கு­மிட வசதி என்­ப­வற்றை மன்­னரே வழங்­கு­கிறார்.

நியூ­ஸி­லாந்­தி­லி­ருந்து வரும் இந்த யாத்­தி­ரி­கர்கள் புனித நக­ரான மக்­கா­விற்கு வரு­டாந்த ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ளும்  ஏனைய  2.5 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இணை­ய­வுள்­ள­தாக நியூ­ஸி­லாந்­துக்­கான சவூதி அரே­பிய  தூதுவர்  அப்­துல்­ ரஹ்மான் அல் சுஹாய்­பானி தெரி­வித்தார்.  கடந்த மார்ச் 15 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் பிராந்­தி­யத்­தி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் அவுஸ்­தி­ரே­லிய வெள்ளையின துப்­பாக்­கி­தா­ரியால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் 51 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். மேற்­படி தாக்­கு­தலால் கவ­ரப்­பட்ட வெள்ளையின ஆதிக்­க­வா­தி­யொ­ரு­வரால் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள வோல்மார்ட் விற்­பனை நிலை­யத்தில் அண்­மையில் நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் குறைந்­தது 22 பேர் பலி­யா­கி­யி­ருந்­தனர்.