(செ.தேன்மொழி)

நுகேகொட - ஜம்புகஸ்முல்ல பகுதியில் வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் இன்று நுகேகொட நீதிவான் ஹெரிஷ் பெல்பொல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன்போது நீதிவான் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும்மொரு சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்தார். அதற்கமைய சந்தேக நபரை 2 இலட்சம் ரூபாய்  இரு சரீர பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மன்றில் தெரிவித்த கொஹூவல பொலிஸார், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி இரவு  விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு ஜீப் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர்கள் இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கி பிரயோகம் செய்து ஒரு வர்த்தகர் உயிரிழந்ததுடன் இன்னுமொருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.