கையடக்க தொலைபேசி  வழியாக மீன் வாங்க  புதிய செயலி..!

By T Yuwaraj

08 Aug, 2019 | 07:23 PM
image

இணையத்தள மீன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக,  கையடக்க தொலைபேசி  வழியாக மீன்கள் வாங்குவதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இந்திய தமிழக மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இணையத்தளம் மூலம் பதிவு செய்து மீன்களை வாங்குவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீன்வளத் துறை சார்பில் www.meengal.com என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம், மாதந்தோறும் 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இணையத்தள மீன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, புதிய செயலியைத் தொடங்க தமிழக மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்தின் மூலம் செயலி ஒன்றை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; “ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இணைய தளத்தை வழக்கமான வாடிக்கையாளர் மட்டும்தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், இணைய தளத்துக்குச் சென்று மீன்களை பதிவு செய்வதைவிட, கையடக்க தொலைபேசியில் ஒரு செயலி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது.

எனவே, வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய செயலியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். தனியார் நிறுவனத்தின் மூலம் புதிய செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த செயலியை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52