பாக்டீரியா தொற்று பரவுதலை கண்டறியும் புதிய கையடக்கத் கருவி 

Published By: Digital Desk 4

08 Aug, 2019 | 06:43 PM
image

எம்முடைய உடலில் நோயைத் தோற்றுவிக்கும் பாக்டீரியா தொற்று பரவுதலை கண்டறியும் எளிய கையடக்க கருவியை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக அசாமில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான கே பரமேஸ்வர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது....

உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படவும், மரணங்கள் ஏற்படவும் பாக்டீரியா கிருமிகளின் தீவிரத்தொற்று மூலகாரணமாக அமைகிறது. நோயைக் கண்டறிவதில் ஏற்படும் காலதாமதம், இதன் முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது தற்போதுள்ள நடைமுறையில் நோயாளியின் உடலிலிருந்து பாக்டீரியா மாதிரிகளை சேகரித்து, அதனை பரிசோதனைக்கூடத்தில் வளர வைத்து, அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தால் மட்டுமே, அதனால் ஏற்படும் நோயின் தன்மையைக் கண்டறிய முடிகிறது. இந்த நடைமுறையானது செலவு மிகுந்ததும், காலதாமதமும், நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலையும் நிலவுகிறது. எனவே பாக்டீரியா தொற்றை எளிய முறையில் கண்டறிவதற்கான கையடக்க கருவியை உருவாக்குவதில் நாங்கள் ஈடுபட்டோம்.

பாக்டீரியாக்களின் செல் சுவர்களில் மின்சுமை காணப்படும். உடலுக்கு நன்மையை விளைவிக்கும் பாக்டீரியாக்களிலும், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலும் மின்சுமையின் அளவு வேறுபட்டு காணப்படும். இந்த மின் சுமையை அளவிடும் சென்சார் அடங்கிய இலத்திரனியல் கருவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாக்டீரியாக்களின் செல் சுவரிலுள்ள மின் சுமைக்கு ஏற்ப இந்த கருவியில் மின்னோட்டம் தூண்டப்படும். தூண்டப்படும் மின்னோட்டத்தை இந்த கருவி பதிவு செய்து கொள்ளும். இதன் மூலம் உடலில் பாக்டீரியா பரவுவதை விரைவில் கண்டறிந்து, உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும், அத்துடன் நோயாளிகளையும் உயிரிழப்பிலிருந்து காப்பாற்ற முடியும். இதன் விலையும் குறைவாகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டறியவும், கருவுறுதலை கண்டறியவும் கண்டறியவும் கையடக்க கருவிகள் இருப்பது போல, எதிர்காலத்தில் பாக்டீரியாக்களின் தொற்றுதலை கையடக்க கருவியின் மூலம் இனி கண்டறியலாம்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04