நடிகை ஹன்சிகா கதையின் நாயகியாக பெயரிடப்படாத ஹாரர் நகைச்சுவை படத்தில் நடிக்கிறார்.

பிரபுதேவா, ஹன்சிகா நடித்த ‘குலேபகாவலி’,  ரேவதி, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண், அடுத்ததாக ஹாரர் நகைச்சுவை படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். 

இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாகவும், முதன்முதலாக பொலிசாகவும் நடிக்கிறார். இதில் அவர் பொலிசாக வேடமேற்று நடிக்கும் பொழுது பேயை பார்த்து பயப்படுகிறார். பேயாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கக்கூடும் என தெரியவருகிறது. முழுக்க முழுக்க கதை நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்தும், ஹாரர் கொமடிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைக்கதைக்கு, ‘காற்றின் மொழி’ படத்திற்கு இசையமைத்த ஏ ஹெச் காசிஃப் இசையமைக்கிறார்

இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் யோகி பாபு, முனிஸ்காந்த், பழைய ஜோக் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று இயக்குனர் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே நடிகை ஹன்சிகா மொத்வானி தமிழில் மகா, பார்ட்னர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.