பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தை வாஹா எல்லையில் பாக்கிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது.

பாக்கிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜௌதா எக்பிரஸை இன்று ஒரு மணியளவில் பாக்கிஸ்தான் அதிகாரிகள் வாஹா எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாங்கள் சம்ஜௌதா  புகையிரதசேவையை நிறுத்த தீர்மானித்துள்ளோம் என  பாக்கிஸ்தானின் புகையிரசேவைகளிற்கான அமைச்சர் சேக் ரசீட் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

நான் அமைச்சராகயிருக்கும்வரை சம்ஜௌதா புகையிரதம் சேவையில் ஈடுபடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக உறவுகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையிலேயே புகையிரத சேவையையும் நிறுத்தியுள்ளது..