முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் 233 ஆவது கிலோமீட்டருக்கும் 234 ஆவது கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட கிழவன்குளம் பகுதியில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொழும்பிலிருந்து மருந்து  பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது மருந்து பொருட்களை  ஏற்றி சென்ற கூலர் வாகனத்தின்  முன்சக்கரம் காற்று  போனதன் காரணத்தினால் வீதியை விட்டு விலகி தடம் புரண்டு சுமார் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.