அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கில்லை தான் நிர்வாகி மட்டுமே என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ் சுண்டுக்குழியிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

என்னை பொறுத்தவரையில் நான் நிர்வாகி மட்டுமே அரசியலுக்கு வரும் திட்டம் ஏதும் என்னிடத்தில்லை. மக்களுக்கு பணி செய்யவே விருப்பம் ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் அல்லது நான் இங்கிருந்து போகவேண்டும் என்று நினைப்பவர்கள் தான் நான் அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் என்றார். 

இதேவேளை இரணைமடு விசாரணை அறிக்கையில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை என தெரிவித்த ஆளுநர் மொழி பெயர்ப்பு நடவடிக்கை என்னும் நிறைவடையவில்லை அதனாலேயே அறிக்கை வெளிவர தாமதமாகின்றது என்றும் விரைவில் அதனை வெளிக்கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார்.