(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஹிஸ்­புல்லாஹ்  தொழிற்­ப­யிற்சி நிறு­வனம் என்­பது வேறு , மட்டக்களப்பு பல்­க­லைக்­க­ழக நிறு­வனம் என்­பது வேறாகும். எமது ஆட்­சியில் ஹிஸ்­புல்லாஹ் தொழிற்­ப­யிற்சி நிறு­வ­ன­மாக இயங்கி பல நல்ல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

எனினும் 2016 ஆம் ஆண்டில் இருந்தே இது பல்­க­லைக்­க­ழ­க­மாக மாறியுள்­ளது என்­பதை  கவ­னத்தில் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும சபையில் தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக நிறு­வனம் குறித்து ஜே.வி.பி. யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலிந்த ஜெய­திஸ்ஸ கொண்­டு­வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

காத்­தான்­கு­டியில் ஒரு தொழிற்­ப­யிற்சி நிறு­வனம்  உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கப்­பட வேண்டும். அத்­துடன் இந்த ஹிரா நிறு­வனம் ஒரு சமூக சேவை நிறு­வனம் என்ற அடிப்­ப­டையில் அந்த விதி­மு­றை­க­ளுக்கு அமை­யவே எமது ஆட்­சியில் எனது அமைச்சு செயற்­பட்­டது. அப்­போது எமக்கு முன்­வைத்த கார­ணி­களை உள்­ள­டக்கி நாம் செலுத்­திய அவ­தா­னங்­க­ளுக்கு அமைய நட­வ­டிக்கை எடுத்தோம். பிர­தான மூன்று கற்கை நெறி­களை உள்­ள­டக்கி பல்­க­லைக்­க­ழ­க­மாக மாற்றும் கோரிக்­கையை முன்­வைத்­தனர். இது 2016 ஆம் ஆண்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. முதல் வங்­கிக்­க­ணக்கும் 2016 ஆம் ஆண்டில் தான் கிடைத்­துள்­ளது. ஆகவே 2015 ஆம் ஆண்டு 7ஆம் மாதத்­துக்கு பின்னர் தான் இடம்­பெற்­றுள்­ளது. ஆனால் எமது காலத்­துடன் இதனை தொடர்­பு­ப­டுத்த அதுவும் எனது அமைச்சு முன்­னெ­டுத்த  தொழிற்­ப­யிற்­சிகள்  திட்­டங்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். 

நீங்கள் என்­னதான் குறை கூறி­னாலும் ஹிஸ்­புல் ­லாஹ்­வுக்கு நன்­றி­கூற கட­மைப்­பட்­டுள்ளேன். மூன்று ஆண்­டு­க­ளுக்கு அவர் இதனை நிறு­வ­ன­மாக கொண்டு சென்றார். தொழிற்­ப­யிற்சி நிறு­வனம் என்ற வகை­யிலே நான் கருத்­துக்­களை முன்­வைக்­கின்றேன். இதில் அப்­பாவி மக்­க­ளுக்கு பல நல்ல வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. நான் பல்­க­லைக்­க­ழகம் பற்றி பேச­வில்லை. அது குறித்து எனக்கு எந்த தெளிவும் இல்லை. ஆனால் மட்டக்களப்பு பல்கலைக்கழக  நிறுவனம் என்பது வேறு, ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறு வனம் என்பது வேறாகும்.  இந்த இரண் டையும் ஒன்றாக்கி அரசியல் செய்ய வேண் டாம்  என்றே கேட்டுக்கொள்கிறேன் என் றார்.