எதிர்­வரும்  ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட எதிர்­பார்க்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யாவின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொள்­வ­தாக தெரி­கி­றது.

கடந்த திங்­கட்­கி­ழமை இந்­தி­யாவின் ஜம்­மு­காஷ்மீர் மாநிலம் ஜம்­மு­கா ஷ்மீர் யூனியன் பிர­தேசம் என்றும் லடாக் யூனியன் பிர­தேசம் என்றும் இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டமை இந்­தி­யாவின் உள்­நாட்டு விவ­காரம் என தெரி­வித்­ததன் ஊடாக பிர­தமர் இந்­தி­யாவின் ஆத­ரவை பெற­மு­யற்­சிப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. 

எந்­த­வொரு நாடும் இது­வரை இந்த காஷ்மீர் விவ­காரம் தொடர்பில்  கருத்து வெளி­யி­டாத நிலையில் இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்­ள­துடன் அது இந்­தி­யாவின் உள்­ள­க­வி­வ­காரம் என்று தெரி­வித்­ததன் மூல­ மாக இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள் என  ஊகிக்க முடிவதாக  சுட்டிக்காட்டப்படுகின்றது