விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணை சோதனை செய்ததில், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்.

எல்டராடோ விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை எக்ஸ் - ரே (X-ray) எடுத்த போது, அவரது தொடையில் தையல் போடப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

அவரை எக்ஸ் - ரே (X-ray) கருவிக்குட்படுத்தியபோது, அவரது தொடைப்பகுதியில், தோலுக்கும் சதைக்கும் இடையில் ஒரு பையொன்று இருப்பது தெரியவந்துள்ளது. 

பின்னர், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு அ றுவை சி கிச்சை செய்து அந்த பையை அகற்றியபோது, அது திரவ கொ க்கைன் என்னும் போதைப்பொருள் என அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இது வரை இப்படியொரு போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றிருக்கவில்லையெனவும் அதிகாரிகள் தெரித்துள்ளனர். 

மேலும், போதைப்பொருள் கடத்திய அந்த அந்த பெண்ணுக்கு அ றுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறுகையில், குறித்த அந்த பையை அகற்றாமல் இருந்தால்,அப்பை இரத்தக் குழாய்களை அழுத்தி, அவரது உயிருக்கே ஆ பத்தாகியிருக்கலாம் என்றார்.

இந்நிலையில், கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 36,733 டொலர்கள் எனவும்,  இதுபோல் போதைப்பொருளை கடத்த உதவுவோருக்கு ஒவ்வொரு முறையும் 1400- 3,000 டொலர்கள் வரை கிடைக்குமெனவும் தெரியவந்துள்ளது. 

அத்தோடு, குறித்தப் பெண், பொலிஸாரின் பாதுகாப்பிலேயே வைத்தியசாலையில் இன்னமும் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்றும் தெரியவந்துள்ளது.