(செ.தேன்மொழி)

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா தொகை பணத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி நிர்வாக பிரிவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை மூவரடங்கிய நீதிவான் குழு  இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேரத்ன, சம்பத் விஜேரத்ன மற்றும் ஜம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது  லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்  முன்னாள் தலைவர் காமினி செனரத் , பியதாச குடாபாலகே மற்றும் லியனகே லசந்த ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.