நாட்டில் ஏற்பட்டுள்ள காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

மழை மற்றும் பலத்த காற்றுக் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தமையால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக  மின் மற்றும்  எரிச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

தெஹிவளை, மலாபே, ஹோமாகம, கொஸ்கமா, பயகல, புட்டலம், தம்புள்ளை மற்றும் நிக்கவரெட்டிய ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சாரத்தை மீண்டும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.